நேற்று (20.12.2019) மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், ஆயுதப்படை காவலர்களுக்கான வருடாந்திர ஆய்வு நடைபெற்றது. மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் வருடாந்திர ஆய்வை மேற்கொண்டார். மேலும் காவலர்களின் அணிவகுப்பையும் பார்வையிட்டார். காவலர்களுக்கு கொடுக்கப்படும் அரசு உடைமைகளையும் சரிபார்த்தார். மற்றும் காவலர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். காவலர்கள் பணியில் சோர்வடையாமல் உற்சாகமுடனும் நேர்மையாகவும் மதுரை மாநகர பொதுமக்களுக்கு முழு மனதுடன் சேவை செய்யவேண்டும் என்றும் மதுரை மக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அனைவரும் பணியாற்ற வேண்டும் எனவும், மதுரை மாநகரை குற்றமில்லா நகரமாக மாற்ற அனைவரும் அயராது பாடுபடவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் காவலர்களின் குறைகளையும் கேட்டறிந்தார் தனிப்பட்ட புகார்கள் மற்றும் அவர்களது தேவைகள் குறித்த புகார் மனுக்களையும் பெற்று விரைவில் சரிசெய்யப்படும் எனவும் உறுதி கூறினார்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர். சவுக்கத் அலி மதுரை மாவட்டம்