திருச்சி மாநகர காவல் ஆணையராக வரதராஜு நியமனம்!திருச்சி மாநகர புதிய காவல் ஆணையராக வரதராஜுவை நியமித்து தமிழக உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார். அதேபோல் மத்திய மண்டல ஐ.ஜியாக அமல்ராஜ் நியமிக்கப்பட்டுளளார். அதனை தொடர்ந்து இணைய குற்றத் தடுப்புப் பிரிவு சிபிசிஐடி எஸ்.பியாக ஜெயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். மயிலாப்பூர் துணை ஆணையராக தேஷ்முக் சேகரை நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவல் தலைமையகத்தின் கூடுதல் ஆணையராக ஜெயராம் நியமிக்கப்பட்டுளளார். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்
Author: policeenews
சிதம்பரத்திற்கு வருகை தந்த தமிழக ஆளுநர்! கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நவம்பர் 30- ந்தேதி 83- வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டர்
சிதம்பரத்திற்கு வருகை தந்த தமிழக ஆளுநர்! கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நவம்பர் 30- ந்தேதி 83- வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு தங்கப்பதக்கம், பட்டங்களை வழங்க உள்ளார். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிதம்பரத்திற்கு 29- ந்தேதி வெள்ளி இரவு திருச்செந்தூர் விரைவு ரயிலில் வந்தார். இவரை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஜெயக்குமார், தென்னக ரயில்வே திருச்சி மண்டல காவல் […]
தவறி விழ இருந்த பயணியை காப்பாற்றிய காவலர்
கோவை மங்களூர் ரயிலில் இருந்து, தவறி விழ இருந்த பயணியை, பாத்திரமாக ஏற்றி விட்ட ரயில்வே தலைமை காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கோவையில் இருந்து மங்களூர் செல்லும், கோவை – மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை கோவை ரயில் நிலையம் நடைமேடை எண் 3 ல் இருந்து, காலை 6.40 மணிக்கு புறப்பட்டது. புறப்பட்ட ரயிலில் மங்களூர் செல்ல வந்த கனவன், மனைவி, மகன் என ஒருகுடும்பத்தினர், ஓடும் ரயிலில் பைகளுடன் ஏற முயன்றனர். […]
கரூர் : விவசாயம் நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்ட நபர்கள் கைது
கரூர் : விவசாயம் நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்ட நபர்கள் கைது கரூர் மாவட்டம்¸ மாமரத்துப்பட்டியில் கஞ்சா செடி பயிரிடுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில்¸ திருச்சி திருவெறும்பூர் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. பிரவீன் உமேஷ் டோங்ரே.¸ இ.கா.ப அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு¸ சுமார் 72 சென்டில் கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்து வந்தது கண்டுபிடிக்கபட்டது. கஞ்சா செடி பயிரிட்ட 2 பேரை கைது செய்யப்பட்டு¸ நிலத்தில் பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டது.
மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் எடப்பாடி. பழனிசாமி அவர்களின் முன்னிலையில் சென்னை கோயம்பேடு 486.21கோடி செலவில் காவல்துறை அதிகாரிகள் பொது மக்களுக்கும் பாதுகாப்பு
மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் எடப்பாடி. பழனிசாமி அவர்களின் முன்னிலையில் சென்னை கோயம்பேடு 486.21கோடி செலவில் நாள் ஒன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட மூன்றாம் நிலை கழிவு நீர் சுத்தி கரிப்பு நிலையத் திறப்பு விழா இவ் விழாவில் காவல்துறை அதிகாரிகள் பொது மக்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி. பழனிசாமி அவர்களுக்கும் மற்றும் அமைச்சர் பெரு மக்களுக்கும் பாதுகாப்பு வழங்கினர் போலீஸ் இ நியூஸ் சென்னை ரிப்போர்ட்டர் சுகன்
விருதுநகர் மாவட்ட செய்திகள்: சிவகாசிதிருமண மண்டபம் இடிந்து விழுந்து விபத்து5 பெண்கள் பலத்த காயம். பெண் ஒருவர் பலி அதன் விபரம் பின்வருமாறு
விருதுநகர் மாவட்ட செய்திகள்:- விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திருமண மண்டப கட்டிடம் இடிந்து விழுந்ததால் அருகே உள்ள குடியிருப்புகளில் வசித்த கனியம்மாள் (55) இறந்தார். மேலும் 5 பெண்கள் பலத்த காயமடைந்தனர்.சிவகாசி வள்ளலார் தெருவில் அரசன் கணேசன் என்ற தனியாருக்குச் சொந்தமான திருமண மண்டபம் உள்ளது, இந்த மண்டபத்தின் பின் பகுதியில் ஜேசிபி இயந்திரங்கள் மூலமாக சுத்தப்படுத்தும் பணி கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்றுக்கொண்டிருந்தது.அப்போது மண்டபத்தின் ஒரு தூண் எதிர்பாராதவிதமாக உடைந்து மண்டபத்தின் உணவகம் முழுவதும் […]
சிபிசிஐடி போலீஸார் எனக் கூறி திருப்பூர் வியாபாரியிடம் பணம் பறித்த இந்திய தேசிய லீக் நிர்வாகிகள் 3 பேர் கைது: தலைமறைவான 3 பேரை பிடிக்க போலீஸ் தீவிரம்
சிபிசிஐடி போலீஸார் எனக் கூறி, திருப்பூரில் வியாபாரியை மிரட்டி ரூ.3 லட்சம் பறித்த கும்பலில் இந்திய தேசிய லீக் கட்சி நிர்வாகிகள் 3 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். கோவையைச் சேர்ந்த மேலும் 3 பேரைத் தேடி வருகின்றனர். திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூர் பகுதியில் வசிப்பவர் டி.ரூடா ராம் சவுத்ரி (36). ராஜஸ்தானை சேர்ந்த இவர், கடந்த 10 ஆண்டு களாக திருப்பூர் ஓடக்காடு பகுதி யில் மளிகை வியாபார நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த […]
காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவு திட்டம்: துடியலூர் பகுதிக்குட்பட்ட 30 இடங்களில் அமல் – குற்றச் சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு தீவிரம்
குற்றச் சம்பவங்களை தடுக்க, துடியலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவு திட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளதுடன், 6 காவல் நிலை யங்களில் ரோந்து குழுவும் அதிகரிக் கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட காவல்துறை நிர்வாகத்தில் 5 உட்கோட்டங்களும், 35 காவல் நிலையங்களும் உள்ளன. அடிதடி, திருட்டு, தகராறு, வழிப்பறி, கொள்ளை உட்பட பல்வேறு புகார்கள் தொடர்பாக, மாவட்டப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்களது எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர். […]
அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: தி. நகரைச் சேர்ந்த தொழிலாளி கைது
தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தி.நகரைச் சேர்ந்த நபர் ஒருவரை போலீஸார் இன்று அதிகாலையில் கைது செய்தனர். சென்னை, தேனாம்பேட்டை, அண்ணாசாலையில் அமைந்துள்ளது அண்ணா அறிவாலயம். திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர்கள் பயன்படுத்தும் அலுவலகம், கூட்ட அரங்கு, நிர்வாக அலுவலகம், திருமணமண்டபம், நூலகம் உள்ளிட்ட பல கட்டடங்கள் உள்ளன. கட்சித்தொண்டர்கள், தலைமை அலுவலக நிர்வாகிகள், செய்தியாளர்களால் நிரம்பி வழியும் அண்ணா அறிவாலயத்தில் நேற்று இரவு வந்த மிரட்டல் போன்கால் […]
மதுபோதை தகராறு மரணத்தில் முடிந்தது: நண்பரைக் கொன்றவர் கைது
மதுபோதையால் நடக்கும் கொலைகள் அங்காங்கே அதிகரித்து வரும் நிலையில் சென்னை கே.கே.நகரில் ஒன்றாக மது அருந்திய நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாட்டிலால் குத்தப்பட்ட நண்பர் பலியானார். சென்னை கே.கே.நகர் ஆர்.கே.சண்முகம் சாலை ஜங்கஷன் அருகில் சாலையோரம் குடியிருப்பவர் கீரித்தலையன் (எ) சிவகுமார்(38). இவரது நண்பர் ராபர்ட்(40). இருவரும் கட்டடத்தொழிலாளர்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கண்ட இடத்தில் அனைவரும் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகின்றனர். வேலை முடிந்தவுடன் ஓய்வு நேரத்தில் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்துவது […]