சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், பெண்கள் கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களுக்கு நேரில் சென்று பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட காவலன் SOS செல்போன் செயலி குறித்தும், அது செயல்படும் விதம் குறித்தும், இச்செயலியின் பயன்பாடு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதன் பயனாக பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் காவலன் SOS செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து, தங்கள் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் இன்று 17.12.2019 காலை, நுங்கம்பாக்கம், லயோலா கல்லூரியில் நடைபெற்ற காவலன் SOS செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கல்லூரி மாணவிகளிடையே இச்செயலியின் பயன் குறித்து எடுத்துரைத்தார். மேலும் இச்செயலியை பதிவிறக்கம் செய்வது குறித்தும், பயன்படுத்தும் விதம் குறித்தும் கல்லூரி மாணவிகளிடையே எடுத்துரைத்து விழிப்புணர்வு பிரசுரங்களை (Awareness Pamphlets) மாணவிகளுக்கு வழங்கினார். அதன்பேரில், இக்கல்லூரி மாணவிகள் காவலன் SOS செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டு சந்தேகங்களை கேட்டு தெளிவடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர் (தெற்கு) திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப., கிழக்கு மண்டல இணை ஆணையாளர் திரு.ஆர்.சுதாகர், இ.கா.ப, திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் திரு.தர்மராஜன், இ.கா.ப, லலோலா கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மற்றும் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.