கரூரைச் சேர்ந்த இளம்பெண் கொலையில் ஓராண்டு கழித்துத் துப்புத் துலங்கியதையடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் 3பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் நடுப்பாளையத்தைச் சேர்ந்த இளையராஜா தன் காதல் மனைவி பர்வீன் பானுவைக் காணவில்லை என 2015ஆம் ஆண்டு வெள்ளியணை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்துப் பர்வீன் பானுவிடம் செல்போனில் அதிகம் தொடர்பில் இருந்தவர்கள் பெருங்களத்தூரைச் சேர்ந்த ராஜா, மாணிக்கம் ஆகியோர் எனத் தெரியவந்தது. இருவரிடமும் பீர்க்கன்கரணை காவல்துறையினர் விசாரித்ததில் முதலில் ராஜாவுடன் தொடர்பில் இருந்த பர்வீன்பானு […]
Author: policeenews
மதுரையில் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய 7 பேர் சென்னையில் கைது
மதுரையில் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய 7 பேரை சென்னையில் போலீசார் கைது செய்தனர். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரடைஸ் தங்கும் விடுதியில், சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலர் தங்கியிருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தங்கும் விடுதியில் சோதனை நடத்திய போலீசார் அங்கு அறை ஒன்றில் தங்கியிருந்த, முகமது ஆருண், தவுபிக் அலி, ரியாசுதீன் உள்ளிட்ட 7 பேரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் மதுரையில் நடந்த குண்டு வெடிப்பு […]
குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக 102 பேரிடம் ரூ.29 லட்சம் மோசடி: தலைமறைவாக உள்ள பெண்ணைப் பிடிக்க தனிப்படை; 2 பேர் கைது
குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி 102 பேரிடம் ரூ.29 லட்சம் பெற்று மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள பெண்ணைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை பாடி, சக்தி நகர், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (43). இவருக்கும் வடபழனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்து வரும் ஓட்டேரியைச் சேர்ந்த மேகலா என்ற பர்வீனுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, மகாலட்சுமி தனக்கு […]
பிரபல தனியார் நிறுவனத்தின் பெயரில் போலி பிஸ்கெட், கேக் தயாரித்த பிஹார் இளைஞர் கைது
பிரபல தனியார் நிறுவனத்தின் பெயரில் போலியாக பிஸ்கெட், கேக் தயாரித்து விற்பனை செய்த பிஹார் இளைஞர் கைது செய்யப்பட்டார். பிரபல தனியார் நிறுவனத்தின் பெயரில் பிஸ்கெட், ரஸ்க், கேக் உள்ளிட்டவைகள் போலியாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அந்த தனிப்பிரிவின் டிஎஸ்பி நீதிராஜன், ஆய்வாளர் விஜயலட்சுமி தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் இரவு சென்னை முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர். கொளத்தூர், புத்தகரம், ஜெயலட்சுமி […]
சென்னையில் ரூ.3 கோடி மதிப்புள்ள 10.5 கிலோ தங்கம் சிக்கியது: மலேசியாவிலிருந்து நூதன முறையில் கடத்திய 3 பேர் கைது
கார்கோ பார்சல் மூலம் மலேசியாவிலிருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள 10.5 கிலோ தங்கத்தை கடத்திய 3 பேரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர். மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சென்னையில் ஏர் கார்கோ பகுதியில் நடத்திய சோதனையில் இரண்டு பேர் சிக்கினர். அவர்கள் பெங்களூரிலிருந்து வந்த பார்சலை தங்கள் வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்த போது மடக்கிப் பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த பார்சல் பெட்டியைப் பிரித்தபோது […]
புத்தாண்டையொட்டி 31-ம் தேதி இரவில் 368 இடங்களில் வாகன சோதனை: சென்னை காவல் ஆணையரகம் அறிவிப்பு
புத்தாண்டையொட்டி 31-ம் தேதி இரவில் 368 இடங்களில் வாகன சோதனை செய்யப்படும் என்று சென்னை காவல் ஆணையரகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் நடப்பதற்கு சென்னை காவல் துறை அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 3,500 போலீஸார் ஈடுபடுத்தப்படுகின்றனர். டிசம்பர் 31-ம் தேதி இரவு 9 மணியில் இருந்து சென்னையில் […]
புத்தாண்டு தினத்தில் அமைதியை காக்க காவல்துறையினர் நடவடிக்கை
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு காவல்துறையினர் சார்பில் சிறப்பு வாகன தணிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த வாகன தணிக்கையில் ஈடுபட உள்ள காவல்துறையினருக்கு, மதுபோதையை கண்டறியும் சுவாச பரிசோதனை கருவி, அதி வேகத்தை அளவிட்டு காட்டும் கருவி ஆகியவற்றை எப்படி உபயோகிப்பது? என்பது குறித்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று நடந்த இந்த பயிற்சியை காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தொழில்நுட்ப பிரிவு காவல் ஆய்வாளர் கணேசன், […]
மதுரையில் போலி மது பாட்டில்கள் தயார்செய்தவர் கைது
மதுரை: 27.12.2017 D1 – தல்லாகுளம் ச&ஒ காவல்நிலைய சார்பு-ஆய்வாளர் திரு.அழகுமுத்து, தலைமை காவலர் (626) திரு.செந்தில் குமார், முதல் நிலை காவலர் (1204) திரு.ஸ்ரீமுருகன் ஆகியோர்களுடன் சரக ரோந்து பணியில் இருந்தபோது தபால்தந்திநகர், மிலிட்டரி கேண்டீன் அருகே உள்ள பெட்டிகடை அருகில் கட்டைப்பையுடன் நின்றிருந்த ஒரு நபரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது அதில் 5 மது பாட்டில்கள் (750 ஆடு) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் விசாரணை செய்தபோது தனது பெயர் லிங்கனாண்டி (60) என […]
கஞ்சா விற்பனை செய்த ஒருவர் கைது
மதுரை: மதுரையில் 27.12.2017 ம் தேதி இரவு ஊ5 கரிமேடு சரூஒ காவல் நிலைய ஆய்வாளர் திரு.கண்ணன் என்பவருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி தனது ரோந்து காவலர்களுடன் சென்று ராஜாங்கம் வயது (70) மதுரை என்ற முகவரியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்தவரை கைது செய்து அவரிடம் இருந்து 1. 200 kg கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு எதிரியை இன்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.
பல இடங்களாக கஞ்சா வற்பனை செய்தவர்கள் தூத்துக்குடி காவல்துறையினரிடம் சிக்கினர்
தூத்துக்குடி: தூத்துக்குடி பகுதியில் கஞ்சா நடமாட்டம் அதிகமாக இருந்து வருவதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து கார் மூலம் கஞ்சா கடத்தி கொண்டு வரப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் முரளிதரன், ஆய்வாளர் மலர்க்கொடி ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் […]