Police Department News

குழந்தைகளின் ஆபாச வீடியோ: ஒருவர் கைது!

குழந்தைகளின் ஆபாச வீடியோ: ஒருவர் கைது!
பேஸ்புக்கில் குழந்தைகளின் ஆபாச வீடியோ பதிவேற்றம் செய்ததாக திருச்சி காஜாப்பேட்டையை சேர்ந்த 42 வயதான ஏசி மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் என்பவரை தனிப்படை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நிலவன் ஆதவன்’ என்கிற போலி கணக்கில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் பதிவேற்றம் செய்ததாக போலீஸார் வட்டார தகவல்கள் கூறுகின்றன. திருச்சியில் இதுவரை 3 போலி கணக்குகளில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்வது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபர் திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்பு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.