பெண் மருத்துவர் கொல்லப்பட்ட அதே இடத்தில் வைத்து 4 பேரின கதையை முடித்த போலீஸ்… ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட அதே இடத்தில் வைத்து 4 குற்றவாளிகளும் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர். ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கடந்த 27ம் தேதி புதன் கிழமை மாலை கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஹைதராபாத்தின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. இந்த […]
Author: policeenews
காரில் நோட்டம்; நோட்ஸ்; தொடர் திருட்டு!’ – காரைக்குடியை அதிரவைத்த கொள்ளையர்கள்
காரில் வலம்வந்து நோட்ஸ் எடுத்துக்கொண்டு, தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேரை காரைக்குடி போலீஸார் கைதுசெய்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த தேர்முட்டி பகுதியில் வசித்துவருகிறார், ஜவுளிக்கடை தொழிலதிபர் இளங்கோமணி. கடந்த மாதம் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு, ஒருவாரம் கழித்து கடந்த 15-ம் தேதி வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது, வீட்டின் கதவு திறந்துகிடந்துள்ளது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, 250 பவுன் நகையும் ரூ.5 லட்சம் பணமும் திருடு போயிருந்தது தெரியவந்தது. காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் […]
போலி விளையாட்டு சான்றிதழ் கொடுத்து போலீஸ் பணியில் சேர முயன்ற மேலும் 3 பேர் கைது: தமிழகம் முழுவதும் மேலும் பலர் சிக்க வாய்ப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் போலி விளையாட்டு சான்றிதழ் வழங்கி போலீஸ் பணிக்கு தேர்வான மேலும்3 பேரை போலீஸார் கைது செய்தனர். போலீஸ் பணிக்கான தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் விளையாட்டு இட ஒதுக்கீட்டில் போலி சான்றிதழ் வழங்கி பணியில் சேர்ந்ததாக எஸ்பி அலுவலக தொலைபேசி எண்ணில் ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட தனிப்படை போலீஸார் விசாரணை செய்தனர். இதில் புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வரும் கமுதியைச் சேர்ந்த மணிராஜன் (23) போலி […]
காவலன் செயலி மூலம் தமிழகத்தில் முதல் கைது: சந்தேகப்படுபடி நடந்த 2 பேர் சிக்கினர்
பெண்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறை மிகுந்த அக்கறையுடன் பல காரியங்களைச் செய்து வருகிறது அதில் விழிப்புணர்வூட்டும் காவலன் செயலி ஒன்று. அதன் செயல்பாடு பரவலாக்கப்பட்ட நிலையில் ஆர்.கே.நகரில் காவலன் செயலி மூலம் 2 பேர் பிடிபட்டுள்ளனர். காவலன் செயலியை பெண்கள் பாதுகாப்புக்காக காவல்துறை உருவாக்கியுள்ளது. செல்போனில் பயன்படுத்தப்படும் இந்தச் செயலியில் உள்ள பட்டனை ஆபத்தில் இருக்கும் பெண்கள் அழுத்திய 15 நொடிகளில் காவல் கட்டுப்பாட்டறை, அருகில் உள்ள காவலர்கள் அனைவருக்கும் மெசேஜ் சென்று உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்குக் […]
மத்திய அரசின் உயரிய விருதை பெறும் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம்
2019 ஆம் அண்டிற்கான தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு பணிக்கான மத்திய அரசின் உயரிய விருது (National Maritime Search and Rescue Award-2019)தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்பட்டு கடலில் தத்தளித்தவர்களை மீட்டமைக்காக இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 18 ஆம் தேதி புது டில்லியில் நடைபெறவிருக்கும் விழாவில் இவ்விருது வழங்கப்படவுள்ளது.
சிங்கப்பூரில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதற்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் ஐயா அவர்கள் வாழ்த்திய மகிழ்வான தருணம்…
சிங்கப்பூரில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதற்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் ஐயா அவர்கள் வாழ்த்திய மகிழ்வான தருணம்…
பணியிடைநீக்கம்; 2 ஆண்டுகள் வழக்கு!’ – இளம்பெண் தற்கொலை
பணியிடைநீக்கம்; 2 ஆண்டுகள் வழக்கு!’ – இளம்பெண் தற்கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட தஞ்சை இன்ஸ்பெக்டர் இந்த வழக்கிலிருந்து விடுதலையாகி மீண்டும் காக்கி உடை உடுத்துவேன் என சேதுமணி மாதவன் தனது நண்பர்களிடம் கூறுவார். தஞ்சாவூரில் அகிலா என்ற இளம் பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன் மீது குற்றம் சுமத்தப்பட்டதுடன் விசாரணையில் அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. தற்போது இந்தத் தண்டனை ரத்து செய்யப்பட […]
ஆபாச படம் பார்த்தவர்களின் மொத்த லிஸ்ட்டும் ரெடியாம்! – வீடியோ என்று கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
ஆபாச படம் பார்த்தவர்களின் மொத்த லிஸ்ட்டும் ரெடியாம்! – வீடியோ “யாரெல்லாம் ஆபாச வீடியோவை பார்த்தார்கள், எத்தனை மணிக்கு பார்த்தார்கள், அதை யாருக்கெல்லாம் ஷேர் செய்தார்கள், அவர்களின் செல்போன் நம்பர், ஐபி நம்பர் என்ன என்ற லிஸ்ட் எடுத்துவிட்டோம்… மொத்த பேரும் கைதாவார்கள்.. 3 முதல் 7 வருஷம் வரை இவர்களுக்கு ஜெயில் உறுதி” என்று கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
ஒருமாதங்களில் 10 சவரன் நகை ஐந்து செல்போன் சொகுசு வாழ்க்கை!’ – காஞ்சியை அதிரவைத்த திருடன்
காஞ்சிபுரம் ஐயப்பாநகர்,அதியமான்நகர்,காந்திநகர்,திருபருத்திகுன்றம் சாலை,பல்லவநகர், உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ளவீடுகளில் இரவு நேரங்களில் நகை மற்றும் செல்போன் அடிக்கடி திருடு போவது வாடிக்கையாக இருந்தது. தொடர்ந்து திருட்டு நடப்பதால் அதற்கான வழக்குகள் கூடிக்கொண்டேபோக போலீஸார் வழக்கு விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இதுதொடர்பாக விசாரிக்க காஞ்சிசரக டி.ஜ.ஜி, திருமதி.தேன்மொழி அவர்களின் ஆலோசனையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.பா சாமுண்டீஸ்வரி அவர்களின் உத்தரவில் ஏ.டி.எஸ்.பி பாலசந்தர் அவர்களின் மேற்பார்வையில் டி.எஸ்.பி. கலைச்செல்வன் காஞ்சிதாலுக்கா காவல்ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர் தலைமையில் தனிப்படை […]










