
அடியாட்கள் வைத்து கடன் வசூல் செய்யும் நிதி நிறுவனங்களுக்கு போலீசார் எச்சரிக்கை
கடன் கொடுக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் சட்டப்படியான நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். நிறுவனங்கள் கடனை வசூல் செய்யும் பைனான்ஸ், சிறு வங்கிகள் அடியாட்கள் வைத்து கடன் வசூல் செய்யும் போது கடன் வாங்கியவர்களின் வீட்டிற்கு சென்று மிரட்டுவது, ஆபாசமாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதை தடுக்க தமிழக அரசு 2025ல் சட்டம் கொண்டுவந்தது. இந்த சட்டத்தின் கீழ் முதன்முதலில் விழுப்புரம் மாவட்டத்தில் F I R பதிவு செய்யப்பட்டுள்ளது. நிதி நிறுவனங்கள் கடன் வசூல் செய்ய சட்டப்படியான வழி முறையை பின்பற்றாத போது, இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.




