Police Department News

சென்னையில் போலியான ஓட்டுநர் உரிமம் கொடுத்து வேலைக்குச் சேர்ந்து, காருடன் மாயமான நபர் கைது

சென்னையில் போலியான ஓட்டுநர் உரிமம் கொடுத்து வேலைக்குச் சேர்ந்து, காருடன் மாயமான நபர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போரூரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் மோகனசுந்தரம் என்பவரிடம் சில மாதங்களுக்கு முன் ராகேஷ் என்பவர் ஓட்டுநராக வேலைக்குச் சேர்ந்துள்ளார். அங்கு ஸ்விப்ட் டிசையர் காரை பெற்று ஃபாஸ்ட் ட்ராக் நிறுவனத்துடன் இணைத்து ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், ராகேஷ் திடீரென காருடன் மாயமானதால், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் மோகனசுந்தரம் புகார் அளித்தார். ராகேஷின் செல்போன் […]

Police Department News

திருவள்ளூர் அருகே வீட்டில் 2 டன் செம்மரக்கட்டைகள் பதுக்கல்

திருவள்ளூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆரம்பாக்கம்  அருகேயுள்ள பெரியநத்தம்காலணி பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஆந்திராவில் இருந்து செம்மரங்களை வெட்டிக் கடத்தி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சோதனை மேற்கொண்ட  போது ரெங்கநாதன் என்பவரது வீட்டில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து செம்மரங்களை பறிமுதல் செய்த போலீசார் ரெங்கநாதன் மற்றும் அவரது மகன் தங்கராஜை […]

Police Department News

ஓட்டல் அறையில் பதுக்கப்பட்டிருந்த 1,300 மதுபாட்டில்கள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வெள்ளேரியில், ஓட்டல் அறையில் பதுக்கி வைத்திருந்த 1300 போலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மதுபாட்டில்களை சப்ளை செய்த செஞ்சியைச் சேர்ந்த குமார் என்பவர் தலைமறைவான நிலையில் சையத் பாஷா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நடத்தி வந்த ஓட்டலில் இருந்து இந்த மதுபாட்டில்களை ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மதுபாட்டில்களைக் கடத்த பயன்படுத்தப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Accidents

விழுப்புரத்தில் பின்னால் வந்த லாரி மோதி காவலர் உயிரிழப்பு

விழுப்புரத்தில் இருந்து செஞ்சி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற காவலர் ஒருவர் பின்னால் வந்த லாரி மோதி பலியானார். பெரியதச்சூர் காவல் நிலைய காவலரான பிரகாஷ், நேற்றிரவு பணி முடிந்து சொந்த ஊரான சூரப்பட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கே.வி.கே. திரையரங்கின் அருகே, பின்னால் நெல்மூட்டைகளை ஏற்றி வந்த லாரி மோதியதில் கீழே விழுந்த பிரகாஷ் பலத்த காயத்துடன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். நிறுத்தாமல் சென்ற லாரியை, சிட்டாம்பூண்டி என்ற இடத்தில் பிடித்த செஞ்சி போலீசார், ஓட்டுநரை கைது […]

Accidents

கோவை மாவட்டம் கேவில் பாளையம் எனும் இடத்தில் இளைஞர்கள் இருவர் தனித்தனி இரு சக்கர வாகனங்களில் குடி போதையில்

ஒருவரை ஒருவர் வேகமாக முந்திக்கொண்டு சென்றனர் அப்பொழுது எதிரே வந்த (TN 38 BH8263) என்ற வாகனம் மீது ஒருவர் பலமாக மோதினார் (TN 38 BZ6908),மேலும் அந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.இதையடுத்து கோவில் பாளையம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். REPORTER MADHAN PRABHU M

Police Department News

காவலர் தேர்வு:- அரசுதேர்வு என்றால் அனைவருக்கும் ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருக்கும் அதிலும் காவல் துறை தேர்வு என வரும்போது சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்

காவலர் தேர்வு:- அரசுதேர்வு என்றால் அனைவருக்கும் ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருக்கும் அதிலும் காவல் துறை தேர்வு என வரும்போது சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் கால் காசு என்றாலும் கவர்மென்ட் காசா இருக்கனும்னு பெரியவர்கள் கூறுவார்கள் அதற்காக இன்று 11/3/2018 ஞாயிறு காலை 10.00 மணி முதல் காவலர் தேர்வு நடைபெற உள்ள சூழ்நிலையில் அருப்புக்கோட்டையில் தனியார் பொறியியல் கல்லூரியில் தேர்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது இதன் காரணமாக காலை 6.00 மணி முதல் […]

Police Department News

மாணவி கொலை சம்பவம்: துணை ஆணையரிடம் மல்லுக்கட்டிய போலி நிருபர் கைது

கல்லூரி மாணவி அஸ்வினி கொலை சம்பவ இடத்தில் விசாரணை நடத்திக் கொண்டிருந்த தி.நகர் துணை ஆணையரிடம் நான் யார் தெரியுமா? என்று பந்தா காட்டிய போலி நிருபரை போலீஸார் கைது செய்தனர். சென்னை கே.கே.நகரில் தனியார் கல்லூரியில் மாணவி அஸ்வினியை அவரது முன்னாள் காதலர் அழகேசன் கொலை செய்தார். அனைவரையும் பதற்றப்பட வைத்த இந்த சம்பவத்தில் போலீஸார் மிகுந்த பதற்றத்துடன் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். சம்பவ இடத்தில் தெற்கு மண்டல கூடுதல் ஆணையர், தி.நகர் துணை ஆணையர் […]

Police Department News

ராஜீவ் காந்தி கொலை கைதி பாதுகாப்புடன் சுவாமி தரிசனம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான அருப்புக்கோட்டை ரவிச்சந்திரன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மீனாம்பிகை நகரைச் சேர்ந்தவர் பொய்யாழி. இவரது மனைவி சந்திரா. இவர்களது மூத்த மகன் ரவிச்சந்திரன்(49). இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் கடந்த 26 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளார். இவர் சொத்து பிரிப்பது தொடர்பாக தற்போது பரோலில் (விடுமுறை) வந்துள்ளார். […]

Police Department News

ரூ.2 லட்சம் செலவு செய்து படிக்க வைத்தேன்; காதலித்து விலகியதால் ஆத்திரம் அடைந்தேன்: அஸ்வினி கொலைவழக்கில் கைதான இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்

ரூ.2 லட்சம் செலவு செய்து படிக்கவைத்த பிறகு காதலித்து விலகியதால் ஆத்திரமடைந்து மாணவி அஸ்வினியை கொலை செய்ததாக அழகேசன் போலீஸில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அஸ்வினி கொலை வழக்கு தொடர்பாக கைதாகியுள்ள அழகேசன், போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: அஸ்வினியும் நானும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அவரை தற்செயலாக பார்த்தேன். முதல் பார்வையிலேயே அவரிடம் மனதை பறிகொடுத்தேன். அவரை எப்படியாவது திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என ஆசைப்பட்டேன். அஸ்வினியைப் பார்க்க […]

Police Department News

நோயுற்ற குழந்தையைப் பார்க்க லீவு கிடையாது; என்ன பிழைப்பு இது? கண்ணீருடன் பேசும் காவலர்: வைரலாகும் வீடியோ

தனது காலுடைந்த குழந்தையை பார்க்க லீவு தர மறுக்கும் அதிகாரி பற்றி கண்ணீர் வழிய பேசும் கான்ஸ்டபிள் ஒருவரின் முகநூல் பதிவு வீடியோ வைரலாகி வருகிறது. என்ன பிழைப்பு இது எதாவது பெட்டிக்கடை வைத்தாவது பிழைத்துக்கொள்கிறேன் என்று பதிவு செய்துள்ளார். காஞ்சிபுரம் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமோனி இதற்கு முன்னர் வேறொரு மாவட்டத்தில் எஸ்.பியாக இருந்தபோது தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஒரு காவலரை நேரில் சென்று கட்டி அணைத்து அவரை தேற்றி ஆறுதல் சொல்லி எதுவானாலும் இனி நீ […]