மனிதநேயமிக்க போக்குவரத்து காவலர்கள்
ஈரோடு பகுதியை சேர்ந்த சுரேஷ் எனபவரது மனைவி பவிதா வயது 29, இவருக்கு ஒரு மகள் வயது சுமார் 5, மற்றும் ஒரு மகன் வயது சுமார் 2 உள்ளனர், இவர்களுக்கு சுமார் ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது, இவர்கள் கணவன் மனைவிக்கு வெகுநாட்களாக கருத்து வேறுபாட்டால் அடிக்கடி சண்டை வந்து கணவர் கோபித்து கொண்டு மனைவியை தவிக்கவிட்டு சென்று விடுவது வழக்கம் இந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் உயர் அதிகாரிகள் முன்னிலையில் சமாதாமும் செய்து வைத்து வாழ்ந்து வந்த நிலையில் இவர் மீண்டும் மனைவியிடம் கோபித்துக் கொண்டு மனைவியை தவிக்கவிட்டு சென்று விட்டார் இதனால் இவர் தன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார் இந்த நிலையில் இவர் கடந்த ஞாயற்று கிழமை மனமுடைந்து வெளியூர் சென்று வேலை செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தன் குழந்தையும் அழைத்து கொண்டு மதுரை வந்துள்ளார் கையில் காசும் இல்லாமல் சாப்பிடாமல் பட்டினி கிடந்த காரணத்தால் மதுரை பெரியார் பஸ் ஸ்டான்ட அருகில் உள்ள கட்டபொம்மன் கொட்டை சுவர் பக்கமாக மயக்கமடைந்து கிழே விழுந்துள்ளார் இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அருகிலிருந்த திடீர் நகர் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு. சின்னகருத்தப்பாண்டி, மற்றும் திருப்பரங்குண்றம் போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. ராஜா ஆகியோரிடம் தகவல் தெரிவித்தனர், தகவல் அறிந்தவுடன் உடனே சென்று அவர்களுக்கு முதலுதவி செய்து அதன் பின் அவர்களுக்கு தங்களது சொந்த பணத்தில் மனிதாபிமானத்துடன் அவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து அவர்களை பற்றி விசாரித்து, நல்ல ஆலோசனைகள் வழங்கி தங்களின் ஊருக்கு பஸ்ஸுக்கும் செலவுக்கும் பணம் கொடுத்து அவர்களை திருநெல்வேலியிலுள்ள அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் மதுரை அழகப்பநகரை சேர்ந்த ராஜதுரை என்பவரும் காவலர்களுக்கு மிகவும் உதவிகரமாக செயல் பட்டுள்ளார்.
மதுரை திடீர் நகர் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு. சின்னகருத்தப்பாண்டி அவர்களையும், திருப்பரங்குண்ற போக்குவரத்து காவலர் திரு. ராஜா அவர்களையும் பொதுமக்களும், சக காவலர்களும் வெகுவாக போராட்டினர்.