Police Department News

மதுரை தத்தனேரி பகுயில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது, செல்லூர் போலீசாரின் அதிரடி

மதுரை தத்தனேரி பகுயில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது, செல்லூர் போலீசாரின் அதிரடி

மதுரை மாநகர் செல்லூர் D2, காவல்நிலையத்தில் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள் பணியில் இருந்த போது அவரது ரகசிய தகவலாளி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி தத்தனேரி மயானம் ரயில்வேடிராக் பின் புறம் கஞ்சா விற்பனை நடைபெருவதாக கூற, மேற்படி தகவலை சார்பு ஆய்வாளர் கனேசன் அவர்கள், நிலைய ஆய்வாளர் திரு. அழகர் அவர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களின் அனுமதி பெற்று காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் கல்யாணசுந்தரம், மற்றும் தலைமை காவலர் திரு.மகேந்திரன், ஆகியோருடன் காலை 11.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, அங்கு காவலர்களை கண்டவுடன் கஞ்சா வைத்திருந்த நபர் தப்பியோட எத்தனித்தார் உடனே சுதாரித்துக் கொண்ட காவலர்கள் அவனை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்ததில் அவன் மதுரை, தத்தனேரி கண்மாய்கரை, கனேசபுரத்தை சேர்ந்த பாண்டி மகன் சுபாஸ் என்ற படையப்பா வயது 23/21, என தெரிய வந்தது. அவன் கஞ்சா விற்பனை செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதின் பேரில் அவனை கைது செய்து அவனிடமிருந்து 1200 கிராம் கஞ்சாவை வைப்பற்றி காவல் நிலையம் அழைத்து வந்து ஆய்வாளர் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள் வழக்கு பதிவு செய்து அவனை விசாரணை செய்து நீதி மன்றத்தில் ஒப்படைத்தனர். நீதி மன்றத்தின் உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டான்.

Leave a Reply

Your email address will not be published.