
தூத்துக்குடி மாவட்டம்
ஆத்தூர் காவல் நிலையம் எல்லைகுட்பட்ட, பகுதியில்,கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது
ஆத்தூர், நரசன்விளை கண்ணகி தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் அருள்குமார் வயது 55 இவருக்கும் நரசன்விளை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த சின்னத்துரை மகன் விக்னேஷ் வயது என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 04.08.2021 நரசன்விளை பகுதியில் கோவில் கொடை விழாவில் ஆடு வெட்டும் பொழுது அருள்குமாருக்கும், விக்னேஷ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ், அருள்குமாரை கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அருள்குமாரின் மகன் பார்த்தீபன் என்பவர் அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஐயப்பன் வழக்கு பதிவு செய்து விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்தார்.
