
மதுரை தெப்பக்குளம் பகுதியில் காவல் கண்காட்சி மதுரை மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்
மதுரை மாநகர காவல் சார்பாக, காவல்துறையினர் பொதுமக்களிடையே நல்லுறவினை ஏற்படுத்தும் விதமாகவும், விபத்தில்லா மாநகரினை உருவாக்கும் நோக்கிலும் மதுரை தெப்பக்குளம் பகுதியில், மாநகர காவல் ஆணையர் அவர்களால் காவல் கண்காட்சி மையம் துவக்கி வைக்கப்பட்டது. இக்கண்காட்சியில் தமிழக காவல்துறையின் வரலாறு குறித்தும், காவல்துறையின் அமைப்பு மற்றும் அதில் உள்ள சிறப்பு பிரிவுகளான, வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழக்கச் செய்தல் பிரிவு, இணையவழி குற்றப்பிரிவு, போக்குவரத்து காவல், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் காவல்துறையில் பயன்படுத்தப்படும் நவீன ஆயுதங்கள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விளக்கக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. மேலும் இக்கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள கையெழுத்து பலகை மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு சுயபுகைப்பட பலகையில் பொதுமக்கள் ஆர்வமுடன் கையெழுத்திட்டும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்
