
சட்டத்தின் ஆட்சியே, நல்லாட்சி, சட்டத்திற்கு உயிர் கொடுத்தால், மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும்
அரசு நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மையை மக்கள் அறிந்து கொள்வதற்காகவும் லஞ்சம் ஊழல் மற்றும் முறைகேடுகளை ஒழிப்பதற்காகவும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இச்சட்டத்தின்படி தகவல் கேட்பவர்களுக்கு நிர்வாகத்தின் பொது தகவல் அலுவலர் 30 நாட்களுக்குள் எழுத்து மூலமாக பதில் தர வேண்டும்.
பதில் தர மறுத்தாலோ, தவரான தகவல்களை அளித்தாலோ, அதை எதிர்த்து அதே அலுவலகத்தில் உள்ள மேல் முறையீட்டு அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அவரும் 30 நாட்களுக்குள் சரியான தகவல்கள் அளிக்கா விட்டால் தமிழக தகவல் ஆணையத்திற்கு மேல் முறையீடு செய்து தகவல் பெறலாம்.
இச்சட்டத்தின்படி தகவல்கள் வழங்க மறுக்கும் அதிகாரிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் அதிகாரம் மாநில தகவல் ஆணையத்திற்கு உள்ளது.
இச்சட்டம் அறிமுகப்படுத்தபட்ட போது ஊழல் செய்யும் அதிகாரிகளிடம் பயம் இருந்தது. குற்றங்கள் குறைய ஆரம்பித்தன.
ஆளும் கட்சியினரின் அரசியலால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மெல்ல நீர்த்து போக துவங்கியுள்ளது. இச்சட்டத்தின் மீது அரசு அதிகாரிகளிடமிருந்த பயம் படிப்படியாக குறைய துவங்கியுள்ளது.
இச்சட்டம் குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை, தகவல் கேட்டு அனுப்பும் மனுக்களை அதிகாரிகள் கண்டு கொள்ளுவதில்லை,
ஆணையத்திற்கு அனுப்பும் மேல் முறையீட்டு மனுக்களும் விசாரிக்கப்படாமல் நான்கு ஆண்டுகள் வரை கிடப்பில் போடப்படுகின்றன,
மத்திய தலைமை தகவல் ஆணையருக்கு தேர்தல் ஆணையருக்கு இணையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதை மத்திய அரசு அச்சட்டத்தில் திருத்தம் செய்து குறைத்து விட்டது. இதனால் அந்த சட்டமே செயலிழந்து கிடக்கிறது.
இதனால் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளிடம் இருந்த பய உணர்வு முற்றிலும் குறைந்து விட்டது.
வலுவிழந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு மீண்டும் அரசு உயிர் கொடுக்க வேண்டும்.
