
கணவன், மனைவி சண்டை போடலாம்! ஆனால் பெற்றோர்கள் சண்டை போடக் கூடாது அதுவும் தங்களின் குழந்தைகள் முன்
−டி.ஜி.பி., சைலேந்திரபாபு.
நமது தமிழக D.G.P. திரு. சைலேந்திரபாபு அவர்களது வாழக்கையில், மனுக்களைப் படிப்பதும் மக்களைச் சந்திப்பதுமாகத்தான் அவரது காலைப் பொழுதுகள் விடியும். அப்படி ஒரு காலைப் பொழுதில் அவரது அலுவலக வாசலில் அந்தச் சிறுவர்களைச் சந்தித்தார். சின்னஞ்சிறுவர்கள் மிகுந்த தயக்கத்தோடு நின்று கொண்டிருந்தார்கள். என்ன வேண்டும் என்று கனிவோடு அவர்கள் முன்னால் உட்கார்ந்து கேட்டார். ஒரு புகார் கொடுக்கணும் என்றான் அந்த இருவரில் அண்ணன் போல இருந்தவன். லேசான சிரிப்போடு யார் மேல என்றார்,
தினம் தினம் சண்டை போடும் எங்க அம்மா அப்பா மேலே? என்றான் அடுத்தவன். அவரது சிரிப்பு உறைந்துவிட்டது. நம்முடைய சுய லாபங்களுக்காக நாம் போடும் சண்டை குழந்தைகளைப் பாதிக்கும் என்பதைப் பல பெற்றோர் புரிந்து கொள்வதேயில்லை.
அந்தச் சிறுவர்களை அமைதிப்படுத்திப் பேசி விட்டு அவர்களுடைய பெற்றோரை வரவழைத்து கவுன்சிலிங் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தார். சின்ன வயதில் காவல் நிலையப் படியேறி வந்து தம் பெற்றோரைப் பற்றி புகார் கொடுக்கும் எண்ணம் வந்திருக்கிறது என்றால் எந்த அளவுக்கு அந்த பிஞ்சு உள்ளங்கள்
காயப்பட்டிருக்கும் என்று நம்மால் உணர முடிகிறது. காக்கி சீருடையில் சட்டம் ஒழுங்கைத் தாண்டி சமூகக் கடமையையும் நிறைவேற்றியுள்ளார் நமது டி.ஜி.பி., அவர்கள்
கணவன் மனைவி சண்டை போடலாம்… ஆனால், அம்மா அப்பா சண்டை போடக் கூடாது!
