![](http://policeenews.com/wp-content/uploads/2021/10/Images149662669.jpg)
மதுரை அருகே, மேலூர் பஸ் நிலையத்தில் மாணவர்களுக்கு இடையே மோதல்30 பேர் மீது வழக்கு
மேலுர் பகுதியில் உள்ளபல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் மேலூரில் இருக்கும் அரசுப் பள்ளிகளில் படித்து வருகிறார்கள் இந்த நிலையில் நேற்று மேலூர் பஸ் நிலையத்தில் பள்ளி மாணவிகளை கேலி செய்தது தொடர்பாக மாணவர்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக் கொண்டனர் மாணவர்களின் ஆதரவாளர்களும் அங்கு வந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர் இந்த சம்பவம் குறித்து அரிட்டாபட்டியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் 32 என்பவரை மேலூர் போலீசார் கைது செய்தனர் மேலும் இரு தரப்பு மாணவர்கள் உட்பட அடையாளம் தெரிந்த 30 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து மேலூர் காவல் ஆய்வாளர் சார்ளஸ் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்
![](http://policeenews.com/wp-content/uploads/2021/10/20210403_142146.jpg)