
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே தொழிலாளி தற்கொலை
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள மலையராமபுரம் இசக்கி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 35). இவருக்கு திருமணமாகி சரஸ்வதி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சக்கரவர்த்தி டீக்கடை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. தனது தேவைக்காக பலரிடம் கடன் வாங்கி உள்ளார். மேலும் தனது மனைவி மூலம் மகளிர் சுய உதவி குழுக்களிலும் கடன்கள் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்து.
இந்நிலையில் நேற்று மாலையில் தனது மனைவி சரஸ்வதியை தெற்கு மடத்தூரில் உள்ள அவரது தாய் வீட்டில் கொண்டு விட்டு மீண்டும் மலையராம புரத்திற்கு வந்துள்ளார். இரவில் மனமுடைந்து காணப்பட்ட சக்கரவர்த்தி தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலையில் அக்கம் பக்கத்தினர் பார்த்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு பாவூர்சத்திரம் போலீசார் விரைந்து சென்று சக்கரவர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சக்கரவர்த்தி அதிகளவில் கடன் வாங்கியதாலும், அந்த பணத்தை திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் தான் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
