மதுரை வில்லாபுரத்தில் மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி மதுபோதையில் செல்போன் டவர் மீது ஏறி வாலிபர் போராட்டம்
மதுரை மாவட்டம் கீரைத்துறை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் வயது 28 இன்று அவரது வீட்டு அருகில் உள்ள செல்போன் டவரின் மீது ஏறி தனது மனைவியுடன் சேர்த்து வைக்குமாறும் இல்லையென்றால் குதித்து விடுவேன் என்றும் மிரட்டினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீரைத்துறை காவல்துறையினர் அனுப்பானடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலைய அலுவலர் திரு.உதயகுமார் மற்றும் காவல் ஆய்வாளர் திரு. பெத்துராஜ்
உதவி ஆணையர்
திரு. சண்முகம் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு பலத்த போராட்டத்திற்கு இடையில் அந்த வாலிபரை பத்திரமாக மீட்டனர்.
