பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் பற்றி பொதுமக்களிடையே கூறி விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்
16.11.2020 திண்டுக்கல் மாவட்டம்.நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தழகுபட்டியில் நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மணிமாறன் அவர்களின் தலைமையில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்தும், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்தும், முன்பின் தெரியாத நபர்களிடம் தங்களது குழந்தைகள் பழகுவதை தவிர்ப்பது குறித்தும், துணைக் கண்காணிப்பாளர் அவர்கள் எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அமுதா அவர்கள் மற்றும் காவல் நிலைய போலீசார், பொதுமக்களும், சிறுவர்களும் கலந்து கொண்டனர்.
