
விருதுநகர் மாவட்ட ஆயுதப்படையில் 09-4-2022 காலை 10 மணியளவில் விருதுநகர் மாவட்ட காவல்துறை மற்றும் வாசன் கண் மருத்துவமனை மதுரை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்.
இதில் விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு மனோகர் ஐபிஎஸ் அவர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு சிவகுமார் அவர்கள் மற்றும் ஆய்வாளர் திருமதி வள்ளியம்மாள் அவர்கள், ஆய்வாளர் திரு வெங்கடாஜலபதி அவர்கள், மதுரை வாசன் கண் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் திரு தொல்காப்பியம் அவர்கள், மேலாளர் திரு முத்துக்குமார் அவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 151 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
சார்பு ஆய்வாளர் திரு மரிய அருள் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
