Police Department News

ரயில்வே ஒப்பந்ததாரர் வெட்டி படுகொலை!

ரயில்வே ஒப்பந்ததாரர் வெட்டி படுகொலை!

சென்னையை சேர்ந்த 50 வயது மதிக்கதக்க பாலகிருஷ்ணன் என்பவர் ரயில்வே துறையில் சிக்னல் ஒப்பந்ததாரராகவுள்ளார்.

நவம்பர் 26 ந்தேதி இரவு திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டைக்கு வந்ததாக தெரிகிறது. இவரை ஜோலார்பேட்டைையை அடுத்த பக்கிரிதக்கா ரயில்வே வழிதடத்தில் வைத்து மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியுள்ளது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இதுப்பற்றி தகவல் கிடைத்ததும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றினர். கொலை செய்யப்பட்டவர் யார் என்பதை கண்டறிந்தவர்கள். எதனால் இந்த கொலை நடந்தது, வெட்டியாது யார்? முன்விரோதமா? தொழில் பகையா?, பெண் தொடர்பா என பலகோணங்களில் இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

பாலகிருஷ்ணன் குடும்பத்தாருக்கு தகவல் சொல்லியுள்ளனர். அவர்கள் ஜோலார்பேட்டை நோக்கி வருவதாக தகவல். கொலை செய்யப்பட்டவரின் உடலை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளது காவல்துறை.

இன்னும் ஒரு நாள் இடைவெளியில் திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரவுள்ளார். இந்நிலையில் ஒரு படுகொலை நடந்திருப்பது போலீஸாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.