Police Department News

மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை டிஜிபி திடீர் ஆய்வு.. கைதிகளிடம் நேரில் விசாரணை!

மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை டிஜிபி திடீர் ஆய்வு.. கைதிகளிடம் நேரில் விசாரணை!

மதுரை மத்திய சிறையில் தமிழக சிறைத்துறை டிஜிபி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை டிஜிபி திடீர் ஆய்வு
கைதிகள் அடைக்கப்படும் பகுதி, நூலகம், மருத்துவமனை, தொழிலகம் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார்
கைதிகளிடம் குறைகளை கேட்டு ஆய்வு செய்தார்

தமிழக சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் பூஜாரி கடந்த 4- ஆம் தேதி பொறுப்பேற்றது முதல் சிறைத்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா்.

அதன் ஒரு பகுதியாக அவா், தமிழகத்தின் முக்கிய சிறைச்சாலைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் மதுரை மத்திய சிறைச்சாலையில் சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி இன்று ஆய்வு செய்தார். மதுரை சிறையில் கைதிகள் அடைக்கப்படும் பகுதி, நூலகம், மருத்துவமனை, தொழிலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பாா்வையிட்டாா்.
தொடர்ந்து கைதிகளுக்கு உணவு தயாா் செய்யப்படும் பகுதிக்கு சென்று, அங்கு சுகாதாரமான முறையில் உணவு தயாரிப்பது மற்றும் கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்கள் உள்ளிட்டவற்றை சோதனையிட்டார். சிறை வளாகத்தில் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் அறை, விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் அறை, பெண்கள் தனிச்சிறை ஆகியவற்றையும் ஆய்வு செய்தாா்.

கைதிகளிடம், அவா்களது குறைகளை அம்ரேஷ் பூஜாரி கேட்டறிந்தாா். மேலும், சிறைத்துறை காவலா்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்று அங்கு வசிக்கும் சிறைக்காவலா் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

Leave a Reply

Your email address will not be published.