
கஞ்சா விற்றவர்கள் கைது
மதுரை மேல அனுப்பானடி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கீரைத்துறை போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்தில் கண்காணித்த போது டூவீலரில் சந்தேகப்படும் படியாக வந்த மூன்று பேரைப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடமிருந்த சாக்குப்பையில் 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் சங்கு பிள்ளை மண்டபத்தை சேர்ந்த மணிகண்டன் வயது (24) சிந்தாமணியை சேர்ந்த குட்டிமணி வயது (22) மேலும் 19 வயதுடைய வாலிபர் கஞ்சா விற்றது தெரிய வந்தது. மூவரையும் கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
