
மாரண்டஅள்ளி அருகே அண்ணன் விஷம் அருந்தியதால் மணமுடைந்த தங்கை விஷம் குடித்து தற்கொலை
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள பொப்பிடி கிராமத்தை சேர்ந்த முருகன்- மணிமேகலை தம்பதியரின் மகள் மகாலட்சுமி (19) +2 முடித்துவிட்டு தருமபுரி தனியார் பள்ளியில் நீட்பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.
கடந்த 3ம் தேதி அண்ணன் உறவு முறையான நவீன் (20) என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்,
மகாலட்சுமி குடும்பத்துடன் அண்ணனை பார்க்க சென்றவர் கண்கலங்கி மணமுடைந்து சோகமாக காணப்பட்டவர் கடந்த 3ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்து சாப்பிட்டு மயக்கமடைந்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
