
தொழிலாளியை தாக்கியவர் கைது
மதுரை திடீர் நகரை சேர்ந்தவர் தக்காளி பாபு (வயது 45). கூலித் தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் தக்காளி பாபு நள்ளிரவு ரேஷன் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் உருட்டு கட்டையால் அவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர். இது தொடர்பாக தக்காளி பாபு, திடீர் நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தக்காளிபாபுவை தாக்கிய பாலாஜி (25), அவரது சகோதரர் முத்துப்பாண்டி (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
மதுரை முத்துராம லிங்கபுரத்தைச் சேர்ந்தவர் காசி (59). கட்டிட தொழிலாளி. இவர் பைக்காரா பால நாகம்மாள் கோவிலுக்கு சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவர் அங்கு வந்தார். அவர் காசியிடம் செல்போனை கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்தால் ஆத்திரமடைந்த சின்னதுரை இரும்பு கம்பியால் காசியை தாக்கினர். இதுபற்றி காசி சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னத்துரையை கைது செய்தனர்.
