மதுரை தல்லாகுளம் பகுதியில் தீ தொண்டு தினத்தை முன்னிட்டு தீ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையில் 2023 ஏப்ரல் 14 ம் தேதி தீ தொண்டு நாள் ( நீத்தார் நினைவு நாள்) அனுசரிக்கப்பட்டது இதில் தமிழ் நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியின் போது பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளை காப்பாற்ற வீரமரணமடைந்த 33 தீயணைப்பு வீரர்களுக்கு வீர வணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 14 ம் தேதி முதல் ஏப்ரல் 20 ம் தேதி வரை தீ தொண்டு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது இந்த ஆண்டு இந்திய அரசின் வழி காட்டுதலின் பேரில் தீ தொண்டு நாள் தினத்தின் கருப்பொருள் தீ பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு தேசிய உள் கட்டமைப்பின் வளர்ச்சியாகும் Awareness in fire safety For growth Of Nation infrastructure என்ற தலைப்பின் கீழ் அனுசரிக்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையாங்களிலும் ஏப்ரல் 14 முதல் 20 தேதி வரையிலான தீ தொண்டு வாரமாக அனுசரிக்கபடுகிறது. இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் மூலம் “தீ” தொண்டு வாரம் பாதுகாப்பு குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சைக்கிள் பேரணியை மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள தல்லாகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. எஸ். அனீஷ் சேகர் கொடியசைத்து துவக்கி வைத்தார்