Police Department News

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சோமனஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய டி.எஸ்.பி. சிந்து.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சோமனஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய டி.எஸ்.பி. சிந்து.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சோமனஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு போக்சோ சட்டம், மற்றும் கஞ்சா குட்கா உள்ளிட்ட போதை வஸ்த்துக்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தன் தலைமையில் நடைப்பெற்றது.

பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ராஜா முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்பு விருந்தினராக பாலக்கோடு டி.எஸ்.பி. சிந்து அவர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவ-மாணவிகளிடத்தில் குழந்தை திருமணம், நல்லதொடுதல், தீய தொடுதல் குறித்தும், பதின்மர் வயது என்பது மாணவ பருவத்தில் முக்கியமான காலகட்டமாகும், இந்நேரங்களில் ஏற்படும் எதிர்பாலின ஈர்ப்பு, மன சஞ்சலம், மன குழப்பம் ஆகியவற்றை தவிர்த்து .படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
அதே போன்று செல்போன், டிவி. சினிமா உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களில் தீயனவற்றை தவிர்த்து நல்ல விஷயங்களை எடுத்து கொள்ள வேண்டும்.
மேலும் கஞ்சா, குட்கா, பான் மசாலா போன்ற போதை வஸ்துக்கள் பயன்படுத் கூடாது.
பாலியல் துன்புறுத்தல், போதை பழக்கம் குறித்து தெரிய வந்தால் 1098 என்ற தொலைபேசி எண்ணிற்க்கு தெரிவிக்க அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் – ஆசிரியைகள் பள்ளி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.