
பாலக்கோட்டில் குற்ற சம்பவங்களை தடுக்க அதிநவீன 32 கண்காணிப்பு கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறப்பு
தர்மபுரிமாவட்டம் பாலக்கேடு ஸ்டேட் பாங்க் முன்பு பாலக்கோடு நகர சுற்று வட்டார பகுதிகளில் அதிநவீன கண்காணிப்பு கேமரா திறப்பு விழா டி.எஸ்.பி சிந்து தலைமையில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி, அரசு வழக்கறிஞர் பி.கே.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாலக்கோடு பேருந்து நிலையம், பாப்பாரப்பட்டி பிரிவுரோடு, தக்காளிமண்டி சந்திப்பு, வடக்கு பைபாஸ் சந்திப்பு, ஆரதஅள்ளி சந்திப்பு நான்கு ரோடு சந்திப்பு
உள்ளிட்ட 32 இடங்களில் அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன்ஜேசுபாதம் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராக்களின் பொதுமக்கள் பயன்பட்டிற்க்கு தொடங்கி வைத்து பேசியதாவது. ஒவ்வொரு கண்காணிப்பு கேமராவும் ஒரு காவாலாளிக்கு சமமாகும்,
குற்ற சம்பவங்களை தடுப்பதிலும், குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிப்பதிலும், கண்காணிப்பு கேமராக்கள் பெரிதும் பங்காற்றுகின்றன. எனவே தற்போது பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை தொடர்ந்து சரிவர பராமரித்து பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும்
வணிகர்கள் தங்கள் கடைகளில் கேமராக்களை பொருத்த வேண்டும். என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
