Police Department News

திருட்டு வழக்கில் ஈடுபட்ட மூன்று நபரை கைது செய்தது சிவகங்கை மாவட்ட காவல்துறை.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மகர்நோன்பு பொட்டல் பகுதியை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் இளங்கோமணி கடந்த மாதம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். இதை அறிந்த சில அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 250 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றனர். இது சம்பந்தமாக இளங்கோமணி காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் 12.09.2019 அன்று அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்ட பொழுது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பார்த்த போது அடிக்கடி கார் ஒன்று அப்பகுதியில் சுற்றியதை கண்ட போலீசார் வாகனத்தின் எண்ணை குறித்து வாகன தணிக்கையில் காரை நிறுத்தி விசாரித்தபோது நகை திருட்டு வழக்கில் ஈடுபட்டது தெரிய வரவே காரைக்குடி வடக்கு போலீசார் 06.12.2019 அன்று அன்புகுமார், சிவராஜன் மற்றும் சதீஷ் ஆகியோரை u/s 454 or 457, 380 IPC-ன் கீழ் வழக்கு பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 120 பவுன் தங்க நகை, 7 1/2 கிலோ வெள்ளி ,7,000 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.