
மருத்துவ மனையில் செய்த சிகிச்சையை ஆவணமாக பெறும் உரிமை
நமக்கு மருத்துவமனையில் என்ன சிகிச்சை செய்தார்கள் என்று அறிந்து கொள்ளவும் அதை ஆவணமாக பெறவும் நமக்கும் நம்மை சார்ந்த இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் உரிமையுண்டு என Indian Medical Council (Professional Conduct Etiquette and Ethics ) Regulation Act 2002 என்னும் சட்டத்தின் மூலம் நமக்கு ஆவணமாக பெறவும் உரிமையுண்டு.என்று Indian Medical Council Regulation Act April 2002 ல் அரசிதழில் மூன்றாம் பாகத்தில் 4 வது பிரிவில் இச்சட்டம் இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது இது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கும் பொருந்தும். IP (In Patient ) நோயாளியோ அல்லது அவர் சார்ந்த இன்சூரன்ஸ் நிறுவனமோ Case Sheet or Medical Records தர வேண்டும் என்று கேட்டால் 72 மணி நேரத்திற்குள் தங்குதடையின்றி தர வேண்டும் என்று Indian Medical Council Regulation act April 2002. 1.3 பிரிவில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. 1.3.1 பிரிவில் IP நோயாளியின் Case sheet டை 3 ஆண்டுகள் வரை பாதுகாத்திருக்க வேண்டும் 1.3.2 பிரிவில் நோயாளியின் Case sheet டை 3 ஆண்டுகள் வரை பாதுகாத்து நோயாளியோ அல்லது அவர் சார்ந்த இன்சூரன்ஸ் நிறுவன பிரதிநிதியோ கேட்டால் மறுப்பின்றி 72 மணி நேரத்திற்குள் தர வேண்டும்
1.3.3 பிரிவில் அவ்வாறு தர இயலவில்லை என்றால் மருத்துவமனையின் Register Medical practitioner அவர்கள் ஆவணமாக தயார் செய்து நோயாளியின் விபரங்களை சான்று அளித்து வழங்க வேண்டும்
1.3.4 பிரிவில் IP நோயாளியின் Case sheet டை அல்லது Medical Records கணினி மயமாகப்பட்டால் விரைவாக 24 மணி நேரத்திற்குள் தங்கு தடையின்று வழங்க வேண்டும்
நோயாளியின் Case Sheet டை அல்லது Medical Records சை தர மறுத்தாலோ அல்லது அதை மாற்றம் செய்தாலோ Adultery correction செய்தாலோ Indian Medical Council act 1956 மற்றும் Indian Medical Regulation act April 2002 ன்படி Misconduct என்ற முறையில் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதமும் வழங்கப்படும் அதோடு மட்டுமல்லாது மருத்துவ மனையின் உரிமம் பறிக்கப்படும்
