Police Department News

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பஸ் நிலையத்தில் 2 பெண்களிடம் பணம் திருட்டு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பஸ் நிலையத்தில் 2 பெண்களிடம் பணம் திருட்டு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பஸ் நிலையத்தில் இருந்து நல்லூர் செல்லும் பஸ்நேற்று மதியம் நபஸ் நிலையம் வந்தது. இந்தப் பஸ்சில் ஏறுவதற்கு பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்த பொதுமக்கள் அவர்களது ஊருக்கு செல்வதற்கு முண்டியடித்துக் கொண்டு ஏறி உள்ளனர்.அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி திட்டக்குடியை அடுத்துள்ள கொட்டாரம் கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன் மனைவி அஞ்சலம் (65) செல்போன், ஆதார்கார்டு, ஏ.டி.எம்.கார்டு, 2 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் திட்டக்குடியை அடுத்துள்ள நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மனைவி மந்த்ராதேவி (35) என்ற பெண்ணிடமிருந்து பான்கார்டு, ஆதார் கார்டு, ரேசன் கார்டு, ஆயிரம் ரூபாய் பணம் ஆகிய 2பேர்களிடம் பையிலிருந்த மணி பர்சை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் திட்டக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீ சார் பயணிகளிடம் தொடர் விசாரணை மேற்கொண்ட னர். யாரும் போலீசாரிடம் சிக்க வில்லை. திட்டக்குடி பஸ் நிலையத்தில் பெண்களிடம் பணம், நகை தொடர்ச்சியாக மர்ம நபர்கள் பறித்து செல்லும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் கூடுதல் போலீசாரை நியமித்து காலை மாலை நேரங்களில் பஸ்களை கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.