Police Department News

சரித்திர பதிவேடு குற்றவாளியை கொலை செய்த இரண்டு நபர்கள் கைது

சரித்திர பதிவேடு குற்றவாளியை கொலை செய்த இரண்டு நபர்கள் கைது

கடந்த (23.01.2024)ந் தேதியன்று இரவு ஸ்ரீரங்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட, திருவானைக்கோவில் சன்னதிவீதி, நான்கு கால் மண்டபம் அருகே உள்ள பூஜை மண்டபம் அருகில், மண்ணச்சநல்லூரை சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி மாதவன் (எ) மண்டவெட்டு மாதவன் (56), த.பெ.பழனிசாமி என்பவரை அடையாளம் தெரியாத நபர்களால் தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டி தலை சிதைக்கப்பட்டு
கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் பிரேதத்தை கைப்பற்றி, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் குற்ற எண்.98/2024 u/s 302 IPC-ன்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொள்ளபட்டது. இக்கொலை நடந்த சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, எதிரிகளை விரைந்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.
தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வந்தது. துரிதமாக மேற்க்கொள்ளபட்ட விசாரணையில், வழக்கில் தொடர்புடைய 1.சங்கர் 2.மணிகண்டன் ஆகிய இருவரும் கொள்ளிடம் இடிந்த பழைய பாலம் அருகில் பதுங்கி இருந்தவர்களை தனிப்படையினர் பிடித்து விசாரணை செய்தபோது, மேற்படி கொலை செய்ததை ஒப்புக்கொண்டதின் பேரில், மேற்கண்ட எதிரிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்கள்.
இவ்வழக்கினை துரிதமாக விசாரணை செய்து, எதிரிகள் மீது வழக்கு பதிவாகி 24 மணி நேரத்திற்குள் விரைந்து எதிரிகளை கைது செய்த தனிப்படையினர் மற்றும் காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாரட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.