கேரளா தமிழ்நாடு எல்கை, கோட்டை வாசல் கருப்பசாமி கோவில் அருகில் மண்சரிவு, மழை தொடரும் பட்சத்தில் விபத்து ஏற்ப வாய்பு
தென்காசி மாவட்டம் புளியறை காவல் நிலையத்திற்குட்பட்ட கேரளா தமிழ்நாடு எல்கை கோட்டை வாசல் கருப்பசாமி கோவில் அருகில் மண்சரிவு சிறிதளவு ஏற்பட்டு தற்போது சாலைக்கு எவ்வித பாதிப்பு இல்லாமல் இருந்து வருகிறது. மீண்டும் மழை தொடரும் பட்சத்தில் கண்டிப்பாக மண்சரிவுடன் கூடிய மரங்களும் பாறைகளும் கண்டிப்பாக சாலையில் விழ வாய்ப்பு அதிகம் உள்ளது. அவ்வாறு விழும் பட்சத்தில் வாகனத்திற்கும் உயிர்க்கும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. உடனடியாக சரி செய்யும் பட்சத்தில் பெரும் ஆபத்தினை தவிர்க்கலாம்.