Police Department News

மாணவர்கள் புத்தகங்கள் படித்தால் மனிதராகலாம் ஓய்வு பெற்ற போலிஸ் ஐ.ஜி. உயர் அதிகாரி

மாணவர்கள் புத்தகங்கள் படித்தால் மனிதராகலாம் ஓய்வு பெற்ற போலிஸ் ஐ.ஜி. உயர் அதிகாரி

மேட்டுப்பாளையம் அருகே கல்லாறில் உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் 22 ஆவது புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற ஐ. ஜி., போலீஸ் உயர் அதிகாரி முத்துச்சாமி அவர்கள் கலந்து கொண்டார்

அவர் பேசுகையில் பள்ளிகளில் புத்தக கண்காட்சி நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் புத்தகங்களை மாணவர்கள் வாசிப்பதால் மொபைல் போன் அடிமைத்தனத்திலிருந்து வெளியே வர அவர்களால் முடியும் புத்தகங்களை படித்தால் அறிவாளியாகவும் ஒரு நல்ல மனிதனாகவும் ஆகலாம் மனிதத் தன்மை தானாக வந்து சேரும் எதிர்கால இந்தியாவை வடிவமைக்கும் சிற்பிகளாக மாணவர்கள் உருவாவார்கள் என்றார்.

இந்த நிகழ்வின் போது பள்ளியில் செயலாளர் கவிதாசன் கல்வி ஆலோசகர் கணேசன் முதல்வர் உமா மகேஸ்வரி துணை முதல்வர் சக்திவேல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published.