Police Department News

மதுரையில் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம்

மதுரையில் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம்

கடந்த 9. 5 .2023 அன்று மதுரை மாநகர் எஸ் எஸ் காலனி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மாடக்குளம் தானத்துவம் புதூர் பகுதியில் குடியிருக்கும் ஈடான் என்பவரின் மகன் அய்யனன் வயது 53, என்பவர் தனது வீட்டில் முன்பு அமர்ந்திருந்த தனது மகன் ஜெயக்குமார் வயது 20 என்பவரை ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் ஏற்பட்ட முன் பகை காரணமாக பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கந்தராஜ் என்பவரது மகன் சோனைராஜ் வயது 40 என்பவர் கொலை செய்ததாக கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு பின் தப்பி ஓடிய எதிரி சோனராஜ் வயது 40 என்பவரை கைது செய்து கொலைக்குப் பயன்படுத்திய அரிவாளை கைப்பற்றி எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை மதுரை மாவட்ட நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது

இந்த நிலையில் நேற்று 25/07/2025 இவ்வழக்கின் சாட்சிகளின் விசாரணை முடிவுற்று தீர்ப்பு வழங்கிய மதுரை மாவட்ட நான்காவது அமர்வு நீதிமன்ற நீதிபதி திரு ஜான் சுந்தரலால் சுரேஷ் அவர்கள் இவ் வழக்கில் எதிரி சோனைராஜ் என்பவர் மீதான குற்றசாட்டுகள் சாட்சிகள் விசாரணையில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமானதால் எதிரியை குற்றவாளி என தீர்ப்பளித்து கொலை குற்றத்திற்கு தண்டனையாக ஆயுள் தண்டனையும் ரூபாய் 10,000 அபராதம் விதித்து அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஆறு மாதம் சிறைத் தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்

இவ் வழக்கில் சிறப்பாக செயல்பட்டு எதிரிக்கு தக்க தண்டனை வாங்கிக் கொடுத்த எஸ் எஸ் காலனி காவல் நிலைய காவலர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.