Police Department News

மதுரை மாநகரில் மகிழ்ச்சி திட்டத்தின் கீழ் போதை மறுவாழ்வு பயிற்சி மையத்தில் சிகிச்சை பெற்று திரும்பிய காவலர்களுக்கான ஆல்கஹால் அனலசிஸ் கலந்துரையாடல் நிகழ்ச்சி

மதுரை மாநகரில் மகிழ்ச்சி திட்டத்தின் கீழ் போதை மறுவாழ்வு பயிற்சி மையத்தில் சிகிச்சை பெற்று திரும்பிய காவலர்களுக்கான ஆல்கஹால் அனலசிஸ் கலந்துரையாடல் நிகழ்ச்சி

29.03.2025 அன்று மதுரை மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவலர்களில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மீண்டு வந்த காவலர்களுக்கான “மகிழ்ச்சி” திட்டத்தின் ஒரு பகுதியாக ஆல்கஹால் அனலைஸ் எனும் நிகழ்ச்சி இன்று மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் மதுரை கே கே நகர் அஹானா மருத்துவமனை மற்றும் திரிசூல் போதை மறுவாழ்வு மைய மனநல மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில்
குடிபழக்கத்தால் ஏற்படும் உடல்நிலை பாதிப்பு மற்றும் மனச்சோர்வு போன்ற இன்னல்களில் இருந்து
மீண்டு வந்த காவலர் அனைவரையும் 15 நாட்களுக்கு ஒரு முறை அழைத்துப் பேசி அவர்களிடம் கலந்துரையாடி அவர்களுக்கு அறிவுரைகள் மற்றும் தேவையான மருத்துவ உதவிகள் செய்வது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி போதை மறுவாழ்வு பயிற்சி மையத்தில் சிகிச்சை பெற்று திரும்பிய
54 காவலர்கள் கலந்து கொண்டு வந்து அவர்களது அனுபவங்கள் மற்றும் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

மனநல காப்பகத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் போதைப் பழக்கத்திலிருந்து மீண்ட ஒவ்வொரு நபரையும் தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது.
மகிழ்ச்சி திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று மீண்டு சமுதாயப் பணிக்கு திரும்பி வந்த காவலர்களுக்கு பதங்களை காவல் ஆணையர் அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் காவல் ஆய்வாளர் திருமதி
ஹேமா மாலா
அஹானா மருத்துவமனை திரிசூலம் போதை மறுவாழ்வு அறக்கட்டளை மைய மனநல மருத்துவர்
கண்ணன் மற்றும் மனநல ஆலசோகர்கள்
கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published.