Police Recruitment

பூந்தமல்லி நெடுஞ்சாலை வானகரம் சந்திப்பில் உள்ள சர்வீஸ் சாலையை சீரமைத்த போக்குவரத்து காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் சென்னை பெருநகர கூடுதல் ஆணையாளர் காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

மழையால் சேதமடைந்த பூந்தமல்லி நெடுஞ்சாலை, (பெங்களூர் விரைவுச்சாலை) வானகரம் சர்வீஸ் சாலையில் வாகன ஓட்டிகளின் வாகனங்கள் ஓட்டுவதற்கு சிரமத்தை அடைந்ததை அறிந்த மதுரவாயல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் காலை நேரங்களிலே வந்து மேற்படி சர்வீஸ் சாலையில் கலவைகளை கொட்டி சாலையை சீரமைத்தனர். மேலும் போக்குவரத்து காவல் ஆளிநர்களே சாலையை செப்பனிடும் இயந்திரங்களை இயக்கி சாலையை சீரமைத்தனர். மேற்படி போலீசார் கடந்த ஒரு வாரமாக அதிகாலை சுமார் 4.00 மணி அளவில் பணிக்கு வந்து சர்வீஸ் சாலையில் சுமார் 400 மீட்டர் தூரம் வரை போக்குவரத்து சீராக செல்லும் வகையில் சர்வீஸ் சாலையை செப்பனிட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் மேற்படி சர்வீஸ் சாலையில் சிரமமின்றி பயணம் செய்வதை காணமுடிகிறது. போக்குவரத்து காவல் ஆளிநர்களின் மேற்படி இந்த சிறப்பான பணியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
சர்வீஸ் சாலையை சீரமைத்து போக்குவரத்து சீராக செல்வதற்கு உதவிய மதுரவாயல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.P.S.சுந்தரவதனம், உதவி ஆய்வாளர் திரு.S.கோவிந்தராஜன், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.R.நரசிம்மன், தலைமைக்காவலர் திரு.S.ஆனந்த் (த.கா.43317), தலைமைக்காவலர் திரு.T.ராஜகுமார் (த.கா.36008), தலைமைக்காவலர் திரு.கிருஷ்ணமூர்த்தி (த.கா.36306), முதல் நிலைக்காவலர் திரு.T.வெங்கடாசலம் (மு.நி.கா.35311) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப, மற்றும் சென்னை பெருநகர கூடுதல்காவல் ஆணையாளர் திரு.அருண் இ.கா.ப, நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

போலீஸ் இ நியூஸ்
ச.அரவிந்தசாமி
இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.