Police Department News

கிருஷ்ணகிரியில் பரபரப்பு, நீதிபதியின் பாதுகாவலராக பணிபுரிந்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கிருஷ்ணகிரியில் பரபரப்பு, நீதிபதியின் பாதுகாவலராக பணிபுரிந்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கிருஷ்ணகிரிக்கு அருகே உள்ள பூந்தோட்டத்தை சேர்ந்தவர் அன்பரசு இவர் காவல்துறையில் காவலராக பணிபுரிந்து வந்தார். தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதிக்கு பாதுகாவலராக இருந்து வந்தார். கடந்த 22 ம் தேதி, நீதிபதி தன் அறைக்கு சென்ற அரை மணி நேரத்தில் காவலர் அன்பரசு தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தனக்கு தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தால் கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

அன்பரசன் உடல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு உடல் கூறு ஆய்விற்காக எடுத்து செல்லப்பட்டது. இவருக்கு திருமணமாகி மூன்றே மாதங்கள்தான் ஆகிறது. இவர் குடும்பப் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது பணி சுமையின் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டாரா என கிருஷ்ணகிரி தாலுகா காவல்நிலைய காவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.