Police Department News

வாகன சோதனையின் போது வாகன ஓட்டிகளுக்கு கொரோனா விழிப்புணர்வை J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிசந்திரன் அவர்கள் வழங்கினார்

வாகன சோதனையின் போது வாகன ஓட்டிகளுக்கு கொரோனா விழிப்புணர்வை J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிசந்திரன் அவர்கள் வழங்கினார்

கொரோனா இரண்டாம் அலை அதிகரிக்கப்பதையொட்டி 25.04.2021 இன்று முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்ததன்பேரில் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப உத்தரவின் படி ஆங்காங்கே சென்னை பெருநகரம் முழுவதும் சோதனைசாவடி அமைத்து வாகனசோதனை மேற்கொண்டு வருகின்றனர். தெற்கு மாவட்ட போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் Dr.Deepa Sathyan IPS மற்றும் (Assistant Commissioner of police Traffic) Mr. Joseph அவர்கள் மேற்பார்வையில் J 2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் அடையாறு சிக்னலில் வாகன சோதனையின் போது வாகன ஓட்டிகளிடம் தகுந்த ஆவணம் இருக்கிறதா என்றும் ஒவ்வொருவரும் முககவசம் அணிந்து இருக்கிறார்களா என்றும் வீட்டிற்கு சென்றவுடன் சானிடைசரை பயன்படுத்த வேண்டும் என்றும் அனைவரும் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என்றும் ஊட்டச்சத்து உணவு வகைகளை எடுத்து கொள்ள வேண்டும் என்றும் மற்றும் ஒவ்வொருவருக்கும் மனித உயிர் எவ்வளவு முக்கியம் என்பதை உணரும் வகையில் தன்னுடைய அனுபவத்தின அடிப்படையில் நல்ல அறிவுரைகளை வழங்கி வருகிறார்.இதுமட்டுமின்றி தடுப்பூசி போடவேண்டும் என்றும் பல நன்மையான அறிவுரைகளை சிறப்பான முறையில் வழங்கினார்.அடையாறு போக்குவரத்து காவல்குழுவினரும் இதில் பங்கு பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published.