இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் தேவர் ஜெயந்திவிழா ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 30 ம் தேதி வெகு விமரிசையாகவும் அரசு விழாவாகவும் கொண்டாடப்பட்டுவருகிறது,அது சமயம் அருப்புக்கோட்டையில் இராமலிங்கா மில் அருகே காவல்துறை சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது இதில் நான்கு சக்கர வாகனங்களில் காவல்துறை அனுமதித்த ஸ்டிக்கர் ஒட்டிய அனுமதிபெற்ற வண்டிகள் மட்டுமே செல்லவேண்டும் இதுதான் நடைமுறையில் உள்ளது, ஆனால் ஒருசிலர் இருசக்கர வாகனத்தில் திருட்டுத்தனமாக பசும்பொன்னிற்கு செல்வதால் அனுமதிமறுக்கப்படுகிறது அதையும் மீறி செல்கின்றனர், அவர்களை தடுத்து நிறுத்தி செல்லகூடாது எனவும் அறிவுரை வழங்கப்பட்டு திருப்பியனுப்பபட்டு வருகின்றது .
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக
VRK.ஜெயராமன்MA,Mphil மாநில செய்தியாளர்
அருப்புக்கோட்டை- 626101
விருதுநகர் மாவட்டம்