Police Department News

மதுரை, செல்லூர் பகுதியில் முக கவசம் அணியாமல் சுற்றி திரிந்த நபர்கள் மீது 1350 வழக்குகள், அபராத தொகை 2,70,000/− ரூபாய் வசூல்

மதுரை, செல்லூர் பகுதியில் முக கவசம் அணியாமல் சுற்றி திரிந்த நபர்கள் மீது 1350 வழக்குகள், அபராத தொகை 2,70,000/− ரூபாய் வசூல்

மதுரை செல்லூர் D2, காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களில் பெரும்பாலும் படிப்பறிவு குறைந்தவர்கள் மற்றும் தினசரி கூலி வேலைக்கு செல்லுபவர்கள் இவர்களுக்கு தொடர்ந்து கொரோனா நோய் தொற்று பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவர் அந்த காவல்நிலைய ஆய்வாளர் திரு. அழகர் அவர்கள், செல்லூரில் ஒவ்வொரு பகுதியாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு அவர்களுக்கு முகக் கவசமும் தொடர்ந்து வழங்கி வருகிறார், மேலும் கபசுர குடி நீரும் மக்களுக்கு வழங்கி மக்களின் நலத்தில் அக்கரை கொண்டு செயல்படுகிறார் இங்கு கூலி வேலை செய்யும் படிப்பறிவு குறைந்த மக்கள் அதிக அளவில் வசித்து வரும் நிலையில் அவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லா காரணத்தால் தற்கொலைகள், அதிகமாகி வருகிறது அதை தடுக்கும் நோக்கத்துடனும், குற்ற செயல்களை தடுப்பதிலும் இவர் முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறார், முகக் கவசம் அணியாமல் சுற்றி திரிவதன் மூலம் மக்களுக்கு நோய் தொற்றை ஏற்படுத்தும் மக்கள் மீது 1350 வழக்குகள் பதிவு செய்து அவர்களிடமிருந்து ரூ. 2,70,000 வரை அபராதம் விதித்து வசூல் செய்துள்ளார். பொதுமக்களிடம் அன்பாகவும், கனிவுடனும், குற்றவாளிகளிடம் கடுமையாகவும் நடந்து, செல்லூர் பகுதியில் கொரோனா நோய் தொற்று இல்லா பகுதியாக்க முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.