கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, போலீசார் நீராவி பிடிக்க காவல் நிலையங்களுக்கு நீராவி குக்கர் வழங்கள்
திருமங்கலத்தில் போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்படாமலிருப்பதற்கு காவல் நிலையங்களுக்கு நீராவி குக்கரை டி.ஐ.ஜி.சுதாகர் அவர்கள் கடந்த புதன் கிழமை வழங்கினார்.
திருமங்கலம் பகுதியில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் ஏரானமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதிலிருந்து காவலர்களை காப்பதற்காக திருமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளர் வினோதினி அவர்கள் காவலர்கள் காவல்நிலையங்களில் நீராவி பிடிக்க நீராவி குக்கர் அமைப்பை ஏற்பாடு செய்துள்ளார்.
இதன் அடிப்படையில் திருமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் எல்லைக்குட்பட்ட 10 காவல் நிலையங்களுக்கு நீராவி குக்கரை டி.ஐ.ஜி. சுதாகர் அவர்கள் வழங்கினார்.
இது குறித்து துணை கண்காணிப்பாளர் வினோதினி கூறியது. கொரோனாவிலிருந்து பாதுகாக்க ஆவிபிடித்தல் பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த குக்கரில் நீர், துளசி, நொச்சி இலை வேம்பு, மஞ்சள், உள்ளிட்டவைகளை போட்டு நீராவி பிடிப்பதன் மூலம் நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம், ஒரு குக்கரில் பைப் மூலம் இருவர் சமூக இடைவெளியுடன் நீராவி பிடிக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் பணியில் இருக்கும் காவலர்கள் காலையிலும், மாலையிலும் தினசரி இரண்டு வேளை நீராவி பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.