Police Department News

மதுரை SS காலனி பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல், இருவர் கைது

மதுரை SS காலனி பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல், இருவர் கைது

மதுரை காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS அவர்கள், மதுரையில் போதை பொருட்கள் கடத்தல் விற்பனையை முற்றிலும் தடுக்க தனி கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அவர்களின் உத்தரவின்படி தனிப் படை அமைக்கப்பட்டு கஞ்சா, மற்றும் புகையிலை குட்கா கடத்தல் விற்பனை செய்வதை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் அதில் ஈடுபடுபவர்கள் மீது கைது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது இதனால் கடந்த சில நாட்களாக மதுரை நகரில் போதை பொருட்கள் நடமாட்டம் குறைந்து வந்தது. இந்த நிலையில் மதுரை S.S.காலனி பகுதியில் மீண்டும் போதைப் பொருட்கள் கடத்தி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஏற்கனவே புகையிலை பொருட்கள் கடத்தி விற்பனை செய்து வந்த கார்த்திக் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது, இந்த சந்தேகத்தின் அடிப்படையில் மதுரை எஸ்.எஸ். காலனி C 3, காவல் ஆய்வாளர் திருமதி. பிளவர் ஷீலா அவர்கள் கடந்த 11 ம் தேதி அதிகாலையில் சார்பு ஆய்வாளர் திருமதி. பேரரசி, தலைமை காவலர் திரு.சரவணக்குமார், முதல் நிலை காவலர் திரு. சுரேஷ், முதல்நிலை காவலர் திரு. முனிஸ்மேரிஜான், மற்றும் முதல்நிலை காவலர் திரு.சிவக்குமார், ஆகியோருடன் மதுரை, எஸ்.எஸ்.காலனி, பார்த்தசாரதி தெருவில் டோர் நம்பர் 2/82 வீட்டின் வாசலில் சென்று பார்த்த போது அங்கே மேற்படி விலாசத்தை சேர்ந்த அருணாசலம் மகன் அசோக்முத்தையா வயது 31/21, மதுரை பெத்தானியாபுரத்தை சேர்ந்த தர்மராஜன் மகன் கார்த்திக்ராஜா வயது 26/21, மதுரை எஸ்.எஸ். காலனியை சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் கார்த்திக்தீபக் வயது 32/21, மதுரை பீபீசாவடியை சேர்ந்த கஜேந்திரன் மகன் கார்த்திக் பாண்டி வயது 24/21, மதுரை, பைகாரா, முத்துப்பட்டியை சேர்ந்த அய்யாகண்ணு மகன் செந்தில் வயது 34/21, ஆகியோர் TN 22 CM 1060, என்ற டாடா ஏசி வண்டியிலிருந்தும், மற்றொரு TN 59 5941 என்ற டாடா ஏசி வண்டியிலிருந்தும் பிளாஸ்டிக் சாக்கு மூடைகளை இறக்கி வீட்டிற்குள் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். அருகில் TN 58 AF 1809 என்ற ஸ்கூட்டி இரு சக்கர வாகனமும் நின்று இருந்தது காவலர்களை கண்டவுடன் மூட்டைகளை இறக்கிக் கொண்டிருந்த ஒரு டாடா ஏஸ் வண்டியும் அதன் அருகில் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தையும், எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். பிறகு அங்கிருந்த மற்ற இருவரையும் சுற்றி வழைத்து பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறினாரககள் அப்போது அங்கிருந்த TN 22 CM 1060 என்ற டாடா ஏசி வண்டியை திறந்து பார்த்த போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட கனேஷ் புகையிலை இருந்தது, இது பற்றி விசாரித்த போது தாங்களும் கார்த்திக் தீபக், கார்த்திக்ப்பாண்டி, செந்தில் ஆகியோரும் சேர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பெங்களூரிலிருந்து மொத்தமாக இனம்தெரியாத வியாபாரிகளிடமிருந்து வாங்கி வந்து அசோக்முத்தையா வீட்டில் வைத்து பிரித்து மதுரை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபும், சிவகங்கை, ஆகிய தென் மாவட்டங்களில் உள்ள வியாபாரிகளிடம் அதிக விலைக்கு விற்று, பணம் சம்பாதித்து வருவதாகவும் இன்றும் பெங்களூர் வியாபரிகளிடம் மொத்தமாக வாங்கி வந்து அசோக்முத்தையா வீட்டில் இறக்கி பதுக்க முயன்ற போது போலீசாரிடம் பிடிபட்டதாகவும் கூறினார்கள்.

தப்பி சென்றவர்கள் பற்றி விசாரித்த போது டாடா ஏஸ் வண்டியில் 10 மூடைகள் கனேஷ் புகையிலையுடன் சென்றவர்கள் கார்த்திக்பாண்டி செந்தில் என்றும் TN 58 AF 1809 என்ற இரு சக்கர வாகனத்தை எடுத்து சென்றது கார்த்திக் தீபக் என்றும் அதில் என்ன இருக்கிறது என்று தெரியாது என்றும் தெரிவித்தார்கள். TN 22 CM.1060 என்ற டாடா ஏஸ் வண்டியில் 10 மூடை ஒரு மூட்டையில் 100 பெரிய பாக்கெட்டுகள், உள்ளது.அந்த பெரிய பாக்கெட்டில் 26 சிறிய பாக்கெட்டுகள் உள்ளது என்றும் அசோக்முத்தையா வீட்டிலுள் மொத்தம் 15 மூடைகள் மொத்தம் 65 ஆயிரம் சிறிய பாக்கட்கள் உள்ளதாகவும் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு பிரித்து கொடுப்பதற்கு துணிப் பை வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள். எனவே மேலே சொன்ன நபர்கள் பதுக்கி வைத்திருந்த குட்கா பொருட்களை கைபற்றி அவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நியமன அலுவலர் அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.