Police Department News

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் விழிப்புணர்வு

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் விழிப்புணர்வு

தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தவில் புதிய கட்டுப்பாடுகள் விதித்து இன்று அமலுக்கு வந்த நிலையில் தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு 10.05.21 முதல் 24.05.21 வரை கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டு அமலில் உள்ளது.தற்போது இன்று 15.05.21 முதல் 24.05.21 வரை காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை காய்கறி பலசரக்கு மற்றும் மளிகை கடைகள் மட்டுமே செயல்பட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் 10 மணியிலிருந்து தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருபவர்களை கண்காணித்து வருகின்றனர் அதே போன்று வெளியே வருபவர்கள் அத்தியாவசியத் தேவைக்காக உரிய ஆவணங்களுடன் வருகின்றனரா என கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று 15.05.21 தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் சந்திப்பில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போலீசாரின் பணிகளை ஆய்வு செய்து வெளியே வந்தலர்களுக்கு கொரோனா வைரஸ் பரவல் குறித்த விழிப்புணர்வும் தேவையில்லாமல் வீட்டை விட்டி வெளியே வர வேண்டாம் முழுமையாக முக கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழவின் போது தூத்துக்குடி மாவட்ட தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், தென்பாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு. சிவக்குமார் மற்றும் காவல் துறையினர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.