மதுரையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள்.மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆய்வு
தமிழகம் முழுவதும் அமலில் உள்ள முழு ஊரடங்கில் மேலும் சில கட்டுபாடுகளை அரசு இன்று முதல் அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி காலை 10 மணிக்கே கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் சூழலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள 2000 க்கும் அதிகமான கடைகளும் 1000 க்கும் மேற்பட்ட மளிகை, காய்கறி கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவது குறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார் அவர்கள் உசிலம்பட்டி பகுதியில் நேரில் ஆய்வு செய்தார்