Police Department News

மதுரை மேலூர் பகுதியில் சட்டவிரோதமாக சூதாட்டம், மேலூர் போலீசார் நடவடிக்கை

மதுரை மேலூர் பகுதியில் சட்டவிரோதமாக சூதாட்டம், மேலூர் போலீசார் நடவடிக்கை

மதுரை மாவட்டம், மேலூர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்களின் உத்தரவின்படி நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. ஜெயக் குமார் அவர்கள் சூரக்குண்டு பகுதியில் நோந்து பணியில் ஈடுபட்டபோது சூரக்குண்டு முனி கோவில் அருகே சிலர் சட்டவிரோதமாக அரசின் அனுமதியின்றி சீட்டு வைத்து உள்ளே வெளியே என்று சூதாடிக்கொண்டிருந்தனர் அவர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் மேலூர் மேலத்தெருவை சேர்ந்த ராமதாஸ் மகன் பிரகாஷ் வயது 40/21, மற்றும் சூரக்குண்டு சேர்ந்த அரசப்பன் மகன் சின்ன அடைக்கன் வயது 45/21, அதே பகுதியை சேர்ந்த லெக்ஷிமணன் மகன் அய்யர் அம்பலம் வயது 47/21, என தெரிய வந்தது. உடனே அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 56 சீட்டுகளையும் பணம் ரூ.1190 /− பறிமுதல் செய்து நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர.

Leave a Reply

Your email address will not be published.