சென்னை: சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்தவர் ஏஜாஸ்கான் (34) இவர் நேற்று முன்தினம் இரவு சென்னை அபிராமபுரம் பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம். ஒன்றில் பணம் எடுக்க முயற்சித்தார். நீண்ட நேரமாக இவர் பணம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதால், அந்த வழியாக ரோந்து வந்த காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர். அவரை பிடித்து விசாரித்தபோது அவர் வெளிநாட்டில் வசிக்கும் வங்கி வாடிக்கையாளர் ஒருவரின் போலி ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயற்சித்தது கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர விசாரணைக்கு பிறகு அவர் நேற்று கைது செய்யப்பட்டார். போலி ஏ.டி.எம். கார்டை தயாரித்து கொடுத்ததாக இக்பால் என்பவரையும் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
Related Articles
சின்னமனூரில் கடன் பிரச்சினையால் வாலிபர் தற்கொலை
சின்னமனூரில் கடன் பிரச்சினையால் வாலிபர் தற்கொலை சின்னமனூரை சேர்ந்தவர் முருகன் (வயது41). இவருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இவர் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.இந்த நிலையில் அவரது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சின்னமனூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ரவளிபிரியா. இ.கா.ப., அவர்கள் அறிவிப்பு.
திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ரவளிபிரியா. இ.கா.ப., அவர்கள் அறிவிப்பு. திண்டுக்கல் மாவட்ட ஊர்காவல் படைக்கு 54 (44 ஆண்கள் & 10 பெண்கள்) நபர்கள் ஊர்க்காவல் படை வீரர்களாக (Home Guards) தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்தேர்வில் கலந்து கொள்வதற்கு 10ம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி பெற்றவர்களாகவும், 18 வயதுக்கு குறையாமலும், 45 வயதுக்கு மிகாமலும் இருப்பவர்களாகவும், திண்டுக்கல் மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்களாகவும், எவ்வித […]
மதுரை மேலூர் தாலுகா பகுதியில் காணாமல் போன 85 பேரை மீட்க சிறப்பு முகாம் நடத்திய காவல் ஆய்வாளர்
மதுரை மேலூர் தாலுகா பகுதியில் காணாமல் போன 85 பேரை மீட்க சிறப்பு முகாம் நடத்திய காவல் ஆய்வாளர் மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவில், மேலுர் காவல் நிலையம், கீழவளவு காவல் நிலையம், மேலவளவு காவல் நிலையம், கொட்டாம்பட்டி காவல் நிலையம் என நான்கு காவல் நிலையங்கள் உள்ளன. கடந்த சில நாட்களில், 85 பேர் காணாமல் போனது தொடர்பாக, மேற்கண்ட காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை மீட்கும் வகையில் வழக்குகள் மீதான […]