Police Department News

அடையாள அட்டையை பயன்படுத்தி பத்திரிகையாளர்கள் தமிழகம் முழுவதும் பயனிக்கலாம். இ-பதிவு தேவையில்லை டி.ஜி.பி.ஜே.கே. திரிபாதி,IPS உத்தரவு

அடையாள அட்டையை பயன்படுத்தி பத்திரிகையாளர்கள் தமிழகம் முழுவதும் பயனிக்கலாம்.
இ-பதிவு தேவையில்லை
டி.ஜி.பி.ஜே.கே. திரிபாதி,IPSஉத்தரவு

பத்திரிகையாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அடையாள அட்டையை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் பயணிக்கலாம். அவர்களுக்கு இ-பதிவு தேவையில்லை என்று டிஜிபி ஜே.கே. திரிபாதி,IPS உத்தரவிட்டுள்ளார்கள். தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிரப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டங்களுக்குள் பயணிக்கவும், மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்கவும் இ−பஸ் அவசியம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மாவட்டங்களின் எல்லைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மருத்துவர்கள் , பத்திரிகையாளர்கள், முன்களப்பணியாளர்கள் வாகனங்களில் செல்ல இ−பதிவு தேவையில்லை என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால் போலீசார் சோதனையில் சில இடங்களில் சோதனையில் பத்திரிக்கையாளர்களிடம் இ−பதிவு ஆவணங்களை கேட்பதாக தெரிய வந்ததை தொடர்ந்து, டிஜிபி.ஜே.கே. திரிபாதி,IPSஅவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பத்திரிகையாளர்கள் அவர்களது அலுவலக அடையாள அட்டை, தமிழக அரசின் அடையாள அட்டை, மற்றும் பிரஸ் கிளப் அடையாள அட்டை இவற்றில் ஏதாவதொன்றை பயன்படுத்தி மாநிலம் முழுவதும் பயணிக்கலாம் இ−பதிவு அவசியமில்லை என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.