இன்று மதுரை மாநகரில் தொடர் மழையின் காரணமாக பழங்காநத்தம் பாலத்தின் கீழ் பகுதியில் அதிக தண்ணீர் தேங்கி சாலை மிகவும் பழுதடைந்து பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் சிரமப்பட்டதால் தெற்கு போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாக JCP இயந்திரம் மூலம் சாலையை சீரமைத்து தண்ணீரை வெளியேற்றி போக்குவரத்து நெரிசலை சரிசெய்து பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர். போக்குவரத்து காவல்துறையினரின் பணியினை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்.
போலீஸ் நிலையங்களில் 2400 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி விருதுநகர் மாவட்ட போலீசார் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 46 போலீஸ் நிலையங்கள், 11 போலீஸ் குடியிருப்புகள், 3 ஆயுதப்படை மைதானங்கள் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் பலன் தரும் 600 மரக்கன்றுகள் உள்பட 2400 மரக்கன்றுகள் இன்று நடப்பட்டது.விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் […]
வளர்ப்பு நாய் குரைத்து துரத்தியதால் தகராறு: கல்லூரி மாணவியை தாக்கிய 2 பேர் கைது வளர்ப்பு நாய் குரைத்து துரத்தியதால் தகராறு: கல்லூரி மாணவியை தாக்கிய 2 பேர் கைது தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கடமடை பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மகள் அறிவுமதி (வயது 21).இவர் தருமபுரி தனியார் கல்லூரியில் பி.பார்ம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு செல்லும் போது அதே பகுதியில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர் முருகனின் வளர்ப்பு […]
இந்திய தண்டனைச் சட்டம் 1860 பிரிவு 304 A கொலைக்கு கொடுக்கப்படும் உரிமமா ? நம்முடைய இந்திய தண்டனைச் சட்டம் 1860 ல் துவக்கப்பட்டபோது இந்த 304 A என்ற பிரிவு இல்லை. இந்திய தண்டனை சட்ட வரைவில் சேர்க்கப்பட்டிருந்த இந்த பகுதி 1860 ல் அந்த வரைவு சட்டவடிவம் பெற்ற போது நீக்கப்பட்டு விட்டது பின்னர் 1870ல் கொண்டுவரப்பட்ட திருத்த சட்டத்தில் அது சேர்க்கப்பட்டது. இப்புதிய பிரிவு எந்த ஒரூ புது குற்றத்தையும் உருவாக்கவில்லை மாறாக […]