தென்காசி மாரத்தான் போட்டியில் 5 வயது இரட்டையர்கள் சாதனை-கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
தென்காசி பட்டாளம் தென்காசி மாவட்ட ராணுவ வீரர்கள் நடத்திய மாரத்தான் போட்டியில் 1,680 பேர் கலந்து கொண்டனர்.
இரட்டையர்கள் சாதனை
அதில் இலத்தூர் ஸ்ரீராம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல் வகுப்பில் படிக்கும் மாணவர்கள், சீவநல்லூர் சட்டநாதனின் பேரன்கள் 5 வயதுடைய இரட்டையர்கள் புகழ்சட்டநாதன் மற்றும் மகிழ் சைலேந்திரன் இருவரும் சாதனை புரிந்துள்ளனர்.
மேலும் இதே பள்ளியைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியை பொன்னம்மாள் மாநில அளவில் மூத்தோர் தடகளப் போட்டிகளில் 1500 மீட்டரில் தங்கம், 800 மீட்டரில் தங்கம், 400 மீட்டரில் வெள்ளி பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
கலெக்டர் பாராட்டு
இந்நிலையில் மாரத்தான் போட்டியில் சாதனை படைத்த 5 வயது இரட்டையர்கள் புகழ்சட்டநாதன் மற்றும் மகிழ் சைலேந்திரன் மற்றும் தகடகங்களை போட்டியில் சாதனை படைத்துள்ள உடற்கல்வி ஆசிரியை பொன்னம்மாள் ஆகியோருக்கு தென்காசி கலெக்டர் வாழ்த்து க்களும் பாராட்டுக்களும் தெரிவித்தார்.
மேலும் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், தென்காசி பட்டாளம் ராணுவ வீரர்கள் சங்கத்தின் கவுரவ தலைவர் என்.ஆர். மணி, தலைவர் ராம்குமார், செயலாளர் முருகன், துணை செயலாளர் ரஞ்சித், பொருளாளர் சங்கர், இலத்தூர் ஸ்ரீராம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் சிவகுமாரி, பள்ளியின் முதல்வர் செய்யது, துணை முதல்வர் கவுரி மற்றும் ராணுவவீரர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், சமூகநல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.