மதுரை, செல்லூர் பகுதியில் செல் போன் திருடியவன், கைது, செல்லூர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை
மதுரை, செல்லூர் D2, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான செல்லூர் பூந்தமல்லி நகர், லெனின் தெருவில் வசித்து வருபவர் ஶ்ரீதர் வயது 21/21, இவர் சர்ஜிகல் பீல்டில் ஒர்க்கராக வேலை செய்து வருகிறார், இவரது தம்பி MAVMM கல்லூரியில் B.com, C.A. படித்து வருகிறார், இவர்கள் இருவரும் கோடை காலமாதலால், தன் வீட்டு மொட்டை மாடியில் கடந்த 22 ம் தேதி இரவு படுத்திருந்தனர் அப்போது தங்களது விலை உயர்ந்த செல் போனில் நோட்டிக்கொண்டே அப்படியே உறங்கி விட்டனர் திடீர் என ஆள் நடமாட்ட சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த போது அவர்களின் இரண்டு பேரின் விலை உயர்ந்த செல் போன்களை ஒருவன் எடுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தான் உடனே அவர்கள் இருவரும் சத்தம் போட பக்கத்திலிருந்த பால்ராஜ் என்ற நபரும் ஆக மூன்று பேரும் சேர்ந்து செல் போன் திருடிக் கொண்டு ஓடியவனை விரட்டிப் பிடித்தனர், பின் அவனையும் அவன் திருடி சென்ற செல் போனையும், செல்லூர் D2, குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர், புகாரை பெற்றுக் கொண்ட ஆய்வாளர் திருமதி ராதா அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர், விசாரணையில் அவன் வழக்கமாக செல் போன்களை திருடும் பழைய திருடன் செல்லூர் 50 அடி ரோட்டில் தனுஷ்கோடி காம்பவுண்டில் குடியிருக்கும் திரவியம் மகன், ரஞ்சித்குமார் வயது 39/21, என தெரிய வந்தது, இவன் தள்ளுவண்டியில் வைத்து வாழைப் பழம் வியாபாரம் செய்வதும், அவ்வாறு வியாபாரம் செய்யும் போது ஒவ்வொரு வீட்டையும் நோட்டமிட்டு திருடிவது வழக்கம், இவன் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் இருக்கும் நிலையில் இவன் மீண்டும் செல் போன் திருடி மாட்டிக்கொண்டான்,
இவன் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பேரில் இவனை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நீதி மன்றத்தில் ஆஜர் செய்து நீதி மன்றத்தின் உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனர்.